PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மின்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்களின் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வினாடியில் மின்கடத்தி வழியாக செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டத்தின் எண் மதிப்பாகும்.
 

மின்னோட்டத்தின் சூத்திரம் பின்வருமாறு:

 

\text{மின்னோட்டம்} = \frac{\text{மின்னூட்டத்தின் அளவு }}{\text{காலம்}}

 

I = Q/t

 

[I - மின்னோட்டம், Q - மின்னூட்டம், t - காலம்]

 

கூலூம்’ என்பது மின்னூட்டத்தின் அலகு. அதன் குறியீடு ‘C

ஒரு மின்கடத்தியின் வழியாக ஒரு வினாடியில் ஒரு கூலம் மின்னூட்டம் பாய்ந்தால் அதன் வழியாக பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் எனலாம்.

மின்னோட்டத்தை அளக்கும் கருவி:

 

அம்மீட்டர் என்பது மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவியாகும்.

 

136910945444f0b389176b.jpg
அம்மீட்டர்

 

செயல்பாடு:

 

ஒரு மின்கலம், ஒரு அம்மீட்டர் மற்றும் மின்விளக்கு ஆகியவற்றைக் கொண்டு எளிய மின் தொடரை உருவாக்கவும். மின் தொடரில் பாயும் மின்னோட்டத்தை அம்மீட்டர் மூலம் அளவிடவும்.

 

shutterstock_1961907988.jpg

 

கணக்கீடு:

 

15 விநாடிகளுக்கு ஒரு மின்சுற்று வழியாக 3 கூலம் மின்னூட்டம் பாயும் போது, ​​அதன் வழியாக பாயும் மின்னோட்டத்தின் அளவு என்னவாக இருக்கும்?

 

மின்னூட்டம், Q = 3 C

 

நேரம், t = 15 s

 

I = Q/t = 3/15 = 0.2 A

 

எனில், மின்சுற்று வழியாக பாயும் மின்னோட்டம் 0.2 ஆம்பியர்.