PDF chapter test TRY NOW
ஒரு அளவீட்டின் எண்ணளவைக் குறிப்பதற்காக ஒரு அலகின் குறியீட்டிற்கு முன்பாக எழுதப்படும் குறியீடுகள் அலகுகளுக்கான முன்னீடுகள் எனப்படும். இந்த முன்னீடுகள் அளவில் பெரியவை மற்றும் சிரியவை முதலியவற்றை குறிப்பதற்கு பயன்படுகின்றன.
மில்லிமீட்டர் என்பதில் மில்லி \((m)\) என்பது முன்னீடு ஆகும். எனவே, முன்னீடு என்பது பத்தின் அடுக்கிலுள்ள நேர்க்குறி அல்லது எதிர்க்குறி எண்ணைக் குறிக்கின்றது.
எடுத்துக்காட்டு
பொதுவாக, இயற்பியல் அளவீடுகளின் மதிப்புகள் மிகப்பெரிய அளவில் மாற்றம் உடையவை. உதாரணமாக, அணுவின் உட்கருவின் ஆரத்தினை \(10^{-15}\) மீ எனவும், இரு கோள்களுக்கு இடையேயான தொலைவை \(10^{26}\) மீ எனவும் குறிக்கிறோம். எலக்ட்ரானின் நிறையை \(9.11 × 10^{-31}\) கி.கி. எனவும், நமது பால்வழித்திரள் அண்டத்தின் நிறையை \(2.2 × 10^{41}\) கி.கி. எனவும் குறிக்கிறோம். இவ்வாறு, பெரிய வித்தியாசங்கள் கொண்ட அளவுகளை ஒப்பிட முன்னீடுகள் தேவைப்படுக்கின்றன.
பத்தின் மடங்கு | முன்னீடு | குறியீடு |
\(10^{15}\) | பீட்டா | \(P\) |
\(10^{12}\) | டெரா | \(T\) |
\(10^9\) | ஜிகா | \(G\) |
\(10^6\) | மெகா | \(M\) |
\(10^3\) | கிலோ | \(k\) |
\(10^2\) | ஹெக்டா | \(h\) |
\(10^1\) | டெக்கா | \(da\) |
\(10^{-1}\) | டெசி | \(d\) |
\(10^{-2}\) | சென்டி | \(c\) |
\(10^{-3}\) | மில்லி | \(m\) |
\(10^{-6}\) | மைக்ரோ | \(µ\) |
\(10^{-9}\) | நானோ | \(n\) |
\(10^{-12}\) | பிக்கோ | \(p\) |
\(10^{-15}\) | ஃபெம்டோ | \(f\) |
அலகுகளுக்கான முன்னீடுகள்