PDF chapter test TRY NOW

ஒரு பொருள், பாய்மங்களில் முழுமையாகவோ அல்லது ஓரளவிற்கோ மூழ்கியிருக்கும் போது, அப்பொருளானது சுற்றியுள்ள பாய்மத்தினால் மேல்நோக்கிய உந்து விசையை உணர்கிறது என்று நாம் பார்த்தோம்.
 
மேலும் திரவங்களின் கீழ்பகுதிகளில் உள்ள அழுத்தம் மேற்பகுதியில் உள்ளதை விட அதிகமாக உள்ளது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த அழுத்த வேறுபாடு தான் அப்பொருள் மீது ஒரு விசையைச் செலுத்தி அப்பொருளை மேல்நோக்கி உந்துகிறது.
 
இந்த விசையை மிதப்பு விசை (Buoyant force) என்றும் இந்த நிகழ்வானது மிதப்புத் தன்மை (Buoyancy) என்றும் அழைக்கப்படுகிறது.
 
5.png
மிதப்பு விசை
 
பெரும்பாலான மிதக்கும் பொருள்கள் அதிக பருமனையும் குறைந்த அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.
ஒரு பொருளானது அது இடப்பெயர்ச்சி செய்த நீரின் எடையை விட குறைவான எடையைக் கொண்டிருந்தால் (அடர்த்தி குறைவு) அத்தகைய பொருள்கள் நேர்மறையான மிதக்கும் தன்மையைக் கொண்டவை எனப்படுகின்றன.
மாறாக,
ஒரு பொருளின் எடையானது அது இடப்பெயர்ச்சி செய்த நீரின் எடையை விட அதிகமான எடையைக் கொண்டிருந்தால் (அடர்த்தி அதிகம்) அப்பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசை குறைந்து அப்பொருள் மூழ்கிவிடும். இத்தகைய பொருள்கள் எதிர்மறையான மிதக்கும் தன்மையைக் கொண்டவை எனப்படும்.
நன்னீரைவிட உப்புநீர் (கடல் நீர்) அதிகமான மிதப்பு விசையை ஏற்படுத்தும். ஏனெனில் மிதப்பு விசையானது பாய்மங்களின் பருமனைச் சார்ந்தது போல அதன் அடர்த்தியையும் சார்ந்துள்ளது.
கார்ட்டீசியன் மூழ்கி (Cartesian diver)
மிதப்புத் தன்மை தத்துவம் செயல்படும் விதத்தை கார்ட்டீசியன் மூழ்கி சோதனையானது விளக்குகிறது.
 
இது களிமண்ணைக் கொண்டதொரு பேனா மூடியாகும். கார்ட்டீசியன் மூழ்கியானது மிதப்பதற்குத் தேவையான போதிய அளவு திரவத்தினாலும், மீதிப்பகுதியில் காற்றினாலும் நிரப்பப்பட்டுள்ளது.
 
10.png
கார்ட்டீசியன் மூழ்கி
 
கொள்கலனிலுள்ள நீரை அழுத்தும் போது அதிகமான உபரி நீர் அதனுள் சென்று, அடர்த்தி அதிகமாகி நீரினுள் மூழ்குகிறது.