PDF chapter test TRY NOW
பாஸ்கல் விதியின் விளைவே ஆர்க்கிமிடிஸின் தத்துவமாகும்.
வரலாற்றுக் குறிப்புகளின் படி, குளியல் தொட்டியில் அமர்ந்திருக்கும் போது தனது எடையில் ஏற்பட்ட வெளிப்படையான இழப்பைக் கவனித்தபிறகு ‘நீர்நிலைசமநிலையின்’ (hydrostatic balance) தத்துவத்தை ஆர்க்கிமிடிஸ் உருவாக்கினார். அவர் இந்தத் தத்துவத்தைக் கண்டுபிடித்தவுடன் ‘யுரேகா (Eureka)’ என்று அலறிக்கொண்டே குளியல் தொட்டியிலிருந்து வெளியே ஓடினார் என்று கூறப்படுகிறது.
“ஒரு பொருளானது பாய்மங்களில் மூழ்கும் போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்குச் சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும்” என்று ஆர்க்கிமிடிஸ் தத்துவம் கூறுகிறது.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
ஒரு பொருள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஓய்வுநிலையில் உள்ள பாய்மத்தில் மூழ்கும் போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்குச் சமமான மேல்நோக்கு விசையை உணரும். இந்த மேல்நோக்கு விசையினால் பொருள் தன் எடையின் ஒரு பகுதியை இழக்கிறது. எடையில் ஏற்பட்ட இந்த இழப்பு மேல்நோக்கு விசைக்குச் சமமாக உள்ளது.
மேல்நோக்கு விசை இடம்பெயர்ந்த திரவத்தின் எடைக்கு சமம்
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் நிஜ வாழ்க்கையில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதில் பயன்படுத்தப்படுகிறது. திரவமானி மற்றும் பால்மானி ஆகியவை ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது