![](http://uploads.cdn.yaclass.in/upload/pumpa/img_4.png)
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoi. தட்டை எபிதீலியம்
![YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_9_2.png](https://resources.cdn.yaclass.in/9ceb0ece-922c-440b-9437-bf20c5a27198/YCIND030620223830OrganisationoftissuesTM9th92w400.png)
தட்டை எபிதீலியம்
அமைப்பு
- மெல்லிய தட்டையான செல்கள், தெளிவான உட்கரு மற்றும் ஒழுங்கற்ற எல்லைகளைக் கொண்டது.
இருப்பிடம்
- வாய்க்குழி, நுரையீரலின் நுண் காற்றுப்பைகள், சிறுநீரகத்தின் அண்மைச் சுருள்குழல், இரத்த நாளங்கள், தோல் மேல் உறை மற்றும் நாக்கு ஆகியவற்றில் மென்மையான பூச்சாக உள்ளது.
பணி
- காயங்கள், வறண்டுப் போதல், நோய்க்கிருமிகள் புகுதல் இவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
ii. கனசதுர வடிவொத்த எபிதீலியம்
![YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_10.png](https://resources.cdn.yaclass.in/59913f56-8a3e-423d-a91d-4ee780bd392f/YCIND030620223830OrganisationoftissuesTM9th10w400.png)
கனசதுர வடிவொத்த எபிதீலியம்
அமைப்பு
- ஒற்றை அடுக்கு கனசதுர செல்களால் ஆனது. மைய வட்ட வடிவ உட்கரு அமைந்துள்ளது.
இருப்பிடம்
- தைராய்டு, உமிழ்நீர் சுரப்பிகள், வியர்வைச் சுரப்பி, கணையச் சுரப்பி, நாளமுள்ளச் சுரப்பி, சிறுகுடல், நெப்ரானின் குழல் பகுதியில் (சிறுநீரக குழல்) நுண் உறிஞ்சிகளாக உள்ளன. இதனால் உறிஞ்சும் பரப்பு அதிகரிக்கிறது.
பணி
- சுரத்தல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
iii. தூண் எபிதீலியம்
![YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_11.png](https://resources.cdn.yaclass.in/5db157fe-d891-472d-a0f5-28cda3d77db3/YCIND030620223830OrganisationoftissuesTM9th11w400.png)
தூண் எபிதீலியம்
அமைப்பு
- ஒற்றை அடுக்கு நீண்ட செல்களால் ஆனது. உட்கரு செல்லின் அடிப்பகுதியில் உள்ளது.
இருப்பிடம்
- இரைப்பை, பித்தப்பை, பித்தநாளம், சிறுகுடல், பெருங்குடல், அண்டக்குழல், கோழைச் சவ்விலும் காணப்படுகிறது.
பணி
- சுரத்தல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.