PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விலங்குத் திசு என்பது ஒன்று அல்லது பல வகையான தனிச்சிறப்புடைய செல்கள் அதன் வெளிப்புறத்தில் உள்ள பொருட்களின் மூலம் ஒன்றோடு ஒன்று இணைந்து திசுவை நிர்ணயிப்பது. 
    Important!
  • செல் பற்றிப் படிக்கும் பிரிவிற்குச் செல்லியல் எனப்படும்.
  • திசுக்கள் பற்றிப் படிக்கும் பிரிவிற்குத் திசுவியல் (ஹிஸ்டோலஜி) என்றுப் பெயர்.
விலங்குத் திசுக்கள் இரு வகைப்படும். அவை,
  • ஒரே மாதிரியான அமைப்பு, தோற்றம், உருவம் மற்றும் வேலை கொண்ட வெவ்வேறு செல்களின் தொகுப்பு எளிய திசுக்கள் எனப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட பணியை சேர்ந்து செய்யும் போது அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் வேறுபட்டு காணப்படும் செல்களின் தொகுப்பு கூட்டுத்திசுக்கள் எனப்படும்.
விலங்கு திசுக்கள், அமைப்பு மற்றும் செயல்பாடுகளைக் அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_7.png
திசுவின் வகைகள்
  • எபிதீலியத் திசு
  • இணைப்புத் திசு
  • தசைத் திசு
  • நரம்புத் திசு
I. எபிதீலியல் திசு
  • எளியத் திசு வகையை சேர்ந்தது.
  • ஒன்று அல்லது பல அடுக்கு செல்களால் ஆனது.
  • உடலின் வெளிப்புற பகுதியையும்உள் உறுப்புகளையும் இச்செல்களால் சூழ்ந்துள்ளது.
  • ஒன்றுடன் ஒன்று செல்கள் இணைந்து உள்ளன மற்றும் குறைந்த செல்வெளி பொருட்களுடன் இருக்கிறது.
  • செல்கள் இல்லா தாங்கு சவ்வு மீது அமைந்து, கொலாஜன் எனும் அமைவூட்டும் கூறு புரதத்தைப் பெற்றுள்ளன.
  • எபிதீலிய திசுக்களில் இரத்த நாளங்கள் இல்லை.
  • கீழுள்ள ஊட்டச்சத்தளிக்கும் இணைப்புத் திசுவால் பிரிக்கப்பட்டுள்ளது.
அவை இரு வகைகள் உண்டு.
 
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_8.png
எளிய மற்றும் கூட்டுத் திசு வகைகள்
 
1. எளிய எபிதீலியம்
  • ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது.
  • அடித்தளச் சவ்வு மீது அமர்ந்து இருக்கும்.
2. கூட்டு எபிதீலியம்
  • பல அடுக்கு செல்களால் ஆனது. 
  • மிக ஆழமான செல் அடுக்கு மட்டுமே அடித்தளச் சவ்வின் மீது இருக்கும்.
எபிதீலியத் திசுக்களின் செயல்பாடுகள்
  • உடலின் வெளிப்பகுதியில் உள்ள தோல், இந்த செல்களால் ஆனது.
  • இதன் பணி: தோலுக்கு அடியில்  உள்ள செல்களைக் காய்ந்து போகாமலும், காயம் அடையாமல் இருக்கவும் மற்றும் நுண்ணுயிரிகளின் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது.
  • நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்சும்.
  • கழிவுப் பொருள்களை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றன.
  • சில எபிதீலிய திசுக்கள் உயிர் வேதிப்பொருட்களான வியர்வை, உமிழ்நீர், கோழை மற்றும் நொதிகளைச் சுரக்கும் செயல்களில் ஈடுபடுகின்றன.
1. எளிய எபிதீலியம்
உடற்குழி மற்றும் நாளங்களின் உட்பூச்சு, ஒற்றை அடுக்கு செல்களால் ஆனவை. இவை ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_9.png
எளிய எபிதீலியச் செல்கள்
  • தட்டை எபிதீலியம்
  • கனசதுர வடிவொத்த எபிதீலியம்
  • தூண் எபிதீலியம்
  • குறுயிழை எபிதீலியம்
  • சுரக்கும் எபிதீலியம்