PDF chapter test TRY NOW

இவ்வகைத் திசுக்களில்,
  • நார்கள்
  • ஃபைப்ரோபிளாஸ்ட்கள்
என இரு வகையான திசு நார்கள் கொண்டுக் காணப்படுகின்றன. மேலும், இது அடர்த்தியாகக் கட்டப்பட்டத் திசு வகையாகும்.
 
அடர்த்தியான இணைப்புத் திசு இரு வகைப்படும். அவை பின்வருமாறு,
i. தசை நாண்கள்
YCIND31052022_3819_Organisation_of_tissues_3.png
தசை நாண்கள் அல்லது டென்டான்
 
அமைப்பு
  • தசை நாண்கள் கயிறு போன்ற உறுதி மற்றும் கட்டுகளுக்கு இணையான கொலாஜன் நார்களைக் கொண்டது. இடையில் ஃபைப்ரோபிளாஸ்ட்கள் உள்ளன.  
பணி
  • எலும்புச் சட்டக தசைகளை எலும்புகளுடன் இணைக்கிறது. தசை நாண்கள் அதிக வலிமை மற்றும் குறைந்த நெகிழ்வுத் தன்மை உடையவை (குறைந்து வளையும் தன்மை).
ii. தசை நார்கள்
YCIND03062022_3831_Organisation_of_tissues_TM_9th_6.png
தசை நார்கள் அல்லது லிகமண்ட்
  
அமைப்பு
  • அதிகமாக நெகிழ்வு (வளையும்) தன்மை கொண்டவை மற்றும் அதிக வலிமையுடையவை.                    
பணி
  • எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கின்றன. மிகக் குறைந்த மேட்ரிக்ஸைப் பெற்றுள்ளன. இவை மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன மற்றும் சாதாரண நகர்வுகளுக்கு உதவுகின்றன.
Important!
தசை நார்கள் அதிகப்படியாக இழுக்கப்படுவதால் சுளுக்கு ஏற்படுகிறது.