PDF chapter test TRY NOW
உடலின் பல பகுதிகளை இணைக்கிறது. செல்கள் இடைவெளியுடன் காணப்படும். செல்லிடை மேட்ரிக்ஸில் பதிந்துள்ளன.
i. இரத்தம்
அமைப்பு
- இரத்தத்தில் சிவப்பணுக்கள் (எரித்திரோசைட்டுகள்), வெள்ளை அணுக்கள் (லியூக்கோசைட்டுகள்), தட்டுகள், இந்த திரவ இணைப்புத் திசுவில் உள்ள பிளாஸ்மா என்று அழைக்கப்படும். திரவ மேட்ரிக்ஸில் இரத்த செல்கள் நகர்கின்றன. இந்த பிளாஸ்மா கனிம உப்புக்களையும், கரிமப் பொருட்களையும் கொண்டுள்ளது.
பணி
- இது உடல் முழுவதும் சுற்றி வரும் திரவம். மேலும் இவை பொருட்களை கடத்த உதவுகின்றன.
இரத்த சிவப்பணுக்கள் (எரித்திரோசைட்டுகள்)
அமைப்பு
- வட்ட வடிவம் மற்றும் வட்டமான இருபுறமும் குழிந்த தட்டு போன்றவை.
- முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களில் உட்கரு இருக்காது (பாலூட்டிகளின் RBC). அவை சுவாச நிறமியான ஹீமோகுளோபினைக் கொண்டுள்ளன.
பணி
- இவை திசுக்களுக்கு ஆக்சிஜனை கடத்திச் செல்லும்.
இரத்தவெள்ளை அணுக்கள் (லியூக்கோசைட்டுகள்)
இரத்த செல்கள்
அமைப்பு
- இவை அளவில் பெரியவை. தெளிவான ஒழுங்கற்ற வடிவ உட்கருவைச் கொண்டவை மற்றும் நிறமற்றவை.
- அமீபா போன்று நகரும் தன்மை கொண்டவை.
இவை இரு வகைப்படும்.
1. கிராணுலோசைட்ஸ் (துகள்கள் உடைய இரத்த வெள்ளையணுக்கள்)
- ஒழுங்கற்ற வடிவ உட்கரு மற்றும் சைட்டோபிளாச துகள்களைப் பெற்றுள்ளன.
- நியூட்ரோஃபில்ஸ், பேசோபில்ஸ் மற்றும் இயோசினோபில்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளன.
2. ஏகிராணுலோசைட்ஸ் (துகள்களற்ற இரத்த வெள்ளையணுக்கள்)
- சைட்டோபிளாஸ்மிக் துகள்கள் இல்லை.
- லிம்போசைட்டுகள் மற்றும் மோனோசைட்டுகளைக் கொண்டுள்ளன.
பணி
- உடலினை பாதுகாப்பது இதன் முக்கியப் பங்கு ஆகும். இவை வெளியிலிருந்து உடலுக்குள்ளே வரும் தேவையில்லாத கிருமிகளை முழுவதும் அழித்துவிடுகிறது.
இரத்த தட்டுகள்
அமைப்பு
- இவை மிகச் சிறியவை. உட்கரு அற்ற மெகாகேரியோசைட்டு எனப்படும்.
- பெரிய எலும்பு மஜ்ஜையின் எளிதில் உடையும் துண்டுகளாகும்.
பணி
- இரத்தம் உறைதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ii. நிணநீர்
அமைப்பு
- இரத்த தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்ட இது ஓர் நிறமற்ற திரவமாகும்.
- பிளாஸ்மா மற்றும் இரத்த வெள்ளை அணுக்கள் கொண்டிருக்கிறது.
பணி
- இரத்தத்திற்கும், திசுத் திரவங்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாறிக்கொள்ள உதவுகின்றன.