PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
3. மியாசிஸ்
\(1905\) ஆம் வருடம் ஃபார்மர் என்பவர் மியாசிஸ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். குன்றல் பகுப்பு அல்லது மியாசிஸ் என்பது செல் பகுப்பு (பிரிதல் ) மூலம் இனச்செல்களையும் அல்லது கேமிட்டுகளையும்  உருவாக்கும் நிகழ்வு ஆகும்.
  • குரோமோசோம் எண்ணிக்கை இருமய \((2n)\) நிலையிலிருந்து ஒருமய \((n)\) நிலையாக குறைக்கப்படும்.
  • இந்த வகை செல் பகுப்பு ஒரு தாய் செல்லிருந்து நான்கு சேய் செல்களாக உருவாக்கப்படுகிறது.
மியாசிஸ் இரண்டு பகுப்புகளைக் கொண்டது. அவை:
  • ஹெட்டிரோடைப்பிக் பகுப்பு அல்லது முதல் மியாசிஸ் பகுப்பு
  • ஹோமோடைப்பிக் பகுப்பு அல்லது இரண்டாம் மியாசிஸ் பகுப்பு
அ. ஹெட்டிரோடைப்பிக் பகுப்பு
  • இரட்டைமய செல் பிரித்தலுக்குப் பின் இது இரு ஒற்றைமய செல்களை உருவாக்குகிறது.
  • இவ்வகை பகுப்பின் மூலம் உருவாகும் சேய் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கை தாய் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கையில் இருந்து மாறுபடும்.
ஐந்து நிலைகளைக் கொண்டது. அவை:
  • புரோ நிலை – I
  • மெட்டாநிலை – I
  • அனாநிலை – I
  • டீலோநிலை – I
  • சைட்டோபிளாச பகுப்பு – I
ii. புரோநிலை – I
 
நீண்ட கால அளவைக் கொண்டது.  ஐந்து துணை நிலைகளாகப் பிரிந்துள்ளது. அவை,
  • லெப்டோடீன்
  • சைக்கோடீன்
  • பேக்கிடீன்
  • டிப்ளோடீன்
  • டயாகைனசிஸ்
லெப்டோடீன்
  • குரோமோசோம்கள் சுருள் பிரிந்து நீண்ட நூல் போல் அதன் உட்கருவில் குறிப்பிட்ட அமைப்பில் சேர்ந்திருக்கும்.
  • பூங்கொத்து போன்ற அமைப்பை கொண்டது.
சைக்கோடீன் (சைக்கோன் - இணையுறுதல்)
  • இரு ஒத்திசை குரோமோசோம்கள் ஒன்று மற்றொன்றை சேர்த்து கொள்கிறது.
  • ஒத்திசை குரோமோசோம்கள் இணைவது சினாப்சிஸ் (ஒன்றியொடுங்கல்) எனப்படும்.
பேக்கிடீன் (பேக்கஸ் - தடித்த)
  • குரோமோசோம்கள் நீண்ட இணைவுற்ற முறுக்கிய நூல்கள் போல் காணப்படும்.
  • இப்படி உருவான ஜோடிகள் இரட்டைத் தொகுப்பு என்று அழைக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு இரட்டைத் தொகுப்பும்நான்கு குரோமேடிட்களை கொண்டது.
  • கையஸ்மேட்டா (கோப்புகள்) என்பது ஒவ்வொரு ஜோடியிலும் ஒன்றுக்கொன்று குரோமோசோம்கள் பிரிவுற ஆரம்பிக்கும் போது முழுவதும் பிரிவுறாமல் ஒன்று அல்லது பல புள்ளிகளில் ஒன்று சேர்ந்து ஆங்கில எழுத்து \(X\) வடிவில் அமைந்துள்ளன.
  • இந்த புள்ளிகளில் குரோமேடிட்கள் முறிவுறுகின்றன.
  • குறுக்கெதிர் கலத்தல் (கிராஸிங் ஓவர்) என்பது முறிவுற்ற பகுதிகள் மற்றொன்றுடன் பரிமாறிக் கொள்கின்றன.
  • இதன் முடிவில் மரபியல் சேர்க்கை மீண்டும் (ஜெனிடக் ரீகாம்பினேசன்) நடைபெறுகிறது.
டிப்ளோடீன்
  • ஒவ்வொரு இரட்டைத் தொகுப்பில் உள்ள தனித் தனி குரோமோசோம்களும்செங்குத்தாக பிளவுற்று இரண்டு ஒரே மாதிரியான குரோமேடிட்களை உருவாக்கும்.
  • ஒன்றுக்கொன்று உள்ள குரோமோசோம்கள் ஒன்றிலிருந்து ஒன்று விடுபடும்.
  • சென்ட்ரோமியர் பகுதியிலிருந்து கையஸ்மேட்டா (கோப்புகள்) மெதுவாக குரோமோசோம் முழுவதும் நகர்ந்து முடிவில் முனைவுறும்.
டயாகைனசிஸ்
  • ஒன்று சேர்ந்து குரோமோசோம்கள் நீளம் குறைவாகவும், தடிமனாகவும் மாறும்.
  • நியூக்ளியார் சவ்வு மற்றும் நியூக்ளியோலஸ் ஆகியவை மறைய ஆரம்பிக்கும்.
  • கதிர் இழைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
YCIND03062022_3837_Organisation_of_tissues_TM_9th_4_1.png
மியாசிஸ் பகுப்பு நிலை I