PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoii. மெட்டாநிலை (மெட்டா – பிந்தைய)
- நகலுற்ற குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதிக்கு சென்று மெட்டா நிலை தட்டை உருவாக்கும்.
- ஒவ்வொரு குரோமோசோமும் ஸ்பிண்டில் இழைகள் மூலம் சென்ட்ரோமியருடன் சேர்கிறன.
- ஒவ்வொரு குரோமோசோமின் சென்ட்ரோமியரும் இரண்டாகப் பிரிந்து ஒவ்வொன்றும் ஒரு குரோமேடிட்டுடன் இணைகிறது.
iii. அனாநிலை (அனா – இறுதி முன்நிலை)
- இரு குரோமேடிட்களுடன் சேர்ந்துள்ளது.
- சென்ட்ரோமியர்கள் பகுப்படைந்து, ஒவ்வொரு குரோமோசோமின் இரு சேய் குரோமோடிட்கள் தனியாகப் பிரிந்து இரு எதிர் எதிர் முனைகளை நோக்கி நகர்கின்றன .
- கதிர் இழைகள் சுருங்குவதால் சேய் குரோமோசோம்கள் நகர்கின்றன.
iv. டீலோ நிலை (டீலோ – இறுதி)
- ஒவ்வொரு குரோமேடிட் அல்லது சேய் குரோமோசோமும் நீண்டு, மெல்லியதாக குரோமேட்டின் நூல் இழைகளில் வலைப்பின்னலாக மாறுகின்றன.
- கதிர் இழைகள் சிதைவுற்று மறைந்து விடும்.
- ஒவ்வொரு சேய் உட்கருவிலும் மீண்டும் உட்கருசவ்வும், உட்கருமணியும் தோன்றும்.
ஆ. சைட்டோபிளாச பகுப்பு (சைட்டோகைனசிஸ்)
சைட்டோபிளாசம் பகுப்பு என்பது சைட்டோபிளாசம் பகுப்படைந்து (பிரிந்த) இரு சேய் செல்கள் உருவாவதாகும்.
- செல் சவ்வின் மையத்தில் ஒடுக்கம் அல்லது சுருக்கம் தோன்றி அவை உள்நோக்கி நீண்டு கடைசியாக சைட்டோபிளாசம் பிரிந்து தாய் செல்லிலிருந்து இருசேய் செல்கள் உருவாகின்றன.
சைட்டோபிளாச பகுப்பு
மைட்டாசிஸின் முக்கியத்துவம்
- சமமாக பிரிந்த இரு மைய சேய் செல்களில் மரபுப்பொருட்கள்சமமாக காணப்படும், எனவே சேய் செல்களில் ஒரே மாதிரியான குரோமோசோம்களின் எண்ணிக்கை \((2n)\) காணப்படுகிறது.
- மைட்டாசிஸ் நிகழ்வின் மூலம் பல செல் உயிரினங்களின் வளர்ச்சி, உறுப்புகளின் உருவாக்கம் மற்றும் உடலின் பருமன் அதிகரிப்பது ஆகியவை நடைபெறுகிறது.
- மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் காயமடைந்த திசுக்கள் புதுப்பிக்கப்பட்டு செல்களை மீட்டு பழைய மற்றும் இறந்த செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.