PDF chapter test TRY NOW

இப்பாடத்தில் நாம் பல வகையான தாவர மற்றும் விலங்குளின் திசுக்கள் பற்றியும், அவை எவ்வாறு மாறுபாடு அடைந்து வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றன என்பதைப் பற்றியும் காண்போம்.
அறிமுகம்
  • ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் நுண்ணுயிரிகள் ஆகும்.
  • எ.கா. பாக்டீரியா மற்றும் புரோட்டோசோவான்கள்.
  • பல செல்களால் ஆன உயிரிகள் உயர் தாவரங்கள் எனப்படும்.
  • பல மில்லியன் செல்களால் ஆன உயிரிகள் விலங்குகள் எனப்படும்.
  • இவ்வாறு பல செல்கள் ஒன்றிணைந்து பல்வேறு அமைப்புகளாக உள்ளன, மேலும் இவைப் பல செயல்களை செய்கின்றன.
  • எ.கா. பல செல் உயிரினங்கள், சிறப்புச் செல்கள், திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு அமைப்புகளைப் பெற்று இவ்வாறு பலச் சிறப்பான செயல்களைச் செய்கின்றன.
ஒரு தாவரத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்வதற்குச் செல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செல்களின் தொகுப்புத் திசுக்கள் என அழைக்கப்படும்.
  • தாவரங்களில் உள்ள திசுக்கள் பல்வேறு உறுப்புகளாக மாறி உள்ளன.
  • எ.கா. தாவர வேர், தண்டு மற்றும் இலைகள் தாவரத்தின் உறுப்புகள் ஆகும். சைலம் மற்றும் புளோயம் ஆகியவை திசுக்கள் ஆகும்.
  • இதே போல் விலங்குகளிலும் திசுக்கள் பல்வேறு செயல்களை செய்வதற்காக மாறி உள்ளன.
  • எ.கா. இரைப்பை ஒரு உள்ளுறுப்பு ஆகும். இது எபிதீலிய செல்கள், சுரப்பு செல்கள் மற்றும் தசைசெல்களின் திசுக்ககளால் ஆனது.
தாவர திசுக்கள்
தாவர திசுக்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை:
  • ஆக்குத்திசு அல்லது நுனியாக்கு திசுக்கள்  
  •  நிலையான திசுக்கள்
ஆக்குத்திசு (மெரிஸ்டெம்)
ஆக்குத்திசு என்பது தொடர்ந்து பகுப்படையும் (பிரியும்) தன்மை கொண்ட ஒரே மாதிரியான  அளவுடைய முதிர்ச்சி நிலை அடையாத செல்களின் தொகுப்பு ஆகும்.
  • \(மெரிஸ்டோஸ்\) என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது.
  • இதன் பொருள் தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்டது.
  • ஆக்குத்திசுக்களை, தாவரங்களின் வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணலாம்.
  • எ.கா.தாவரத் தண்டின் நுனிப்பகுதி, வேரின் நுனிப்பகுதி, இலை மூலங்கள், வாஸ்குலார் கேம்பியம், தக்கை கேம்பியம் மற்றும் பிற.
ஆக்குத்திசுக்களின் சிறப்புப் பண்புகள்
  • உயிர் உள்ள செல்களால் ஆனவை.
  • சிறியதாக, முட்டை வடிவ, பலகோண அல்லது கோள வடிவில் உள்ளன.
  • மெல்லிய செல்சுவர், பெரிய நியூக்ளியஸ், அடர்ந்த சைட்டோபிளாசம் மற்றும் சிறிய குமிழ்களைக் கொண்டுள்ளன.
  • மைட்டாசிஸ் செல்பகுப்புக்கு உட்படக்கூடியவை.
  • இவை வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணப்படும் ஆனால் உணவை சேமிப்பதில்லை.
I. அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்குத்திசுக்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
  1.  நுனி ஆக்குத் திசு 
  2. இடையாக்குத் திசு
  3. பக்க ஆக்குத் திசு
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_1.png
ஆக்குத் திசுக்களின் வகைகள்
 
1. நுனி ஆக்குத் திசு:
  • வேர், தண்டு மற்றும் கிளைகளின் நுனியில் காணப்படும்.
  • ஒரு தாவரத்தின் நீள்போக்கு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது.
2. இடையாக்குத் திசு
  • இது நுனி ஆக்குத்திசுவிலிருந்து தோன்றும்.
  • நிலையான திசுப்பகுதிகளுக்கு இடையே காணப்படும்.
  • இவ்வகை திசுக்கள், தாவர இலைகளின் அடிப்பகுதியிலோஎ.கா. பைனஸ் தாவரம் அல்லதுகணுவிடைப் பகுதியின் அடியிலோ காணப்படுகின்றன எ.கா.புற்கள் 
3. பக்க ஆக்குத் திசு
  • இது தண்டு மற்றும் வேரின் பக்கவாட்டில் அதன் நீள அச்சுக்கு இணையாக உள்ளது.
  • தாவரப் பகுதியின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
  • ஒரு தாவரத்தின் இரண்டாம் நிலை வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது.
ஆக்குத்திசுவின் பணிகள்
  • ஆக்குத்திசுக்கள் நன்கு பகுப்படையும் தன்மை கொண்ட திசுக்களாகும்.
  • இவை தாவரத்தின் முதலாம் வளர்ச்சி மற்றும் இரண்டாம் வளர்ச்சி நடைபெற காரணமாக உள்ளன.