PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநிலைத்தத் திசுக்கள் என்பவை பகுப்படையும் திறனை (பிரிதல் திறன்) நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக இழந்த திசுக்களாகும். சில சமயங்களில் நிலைத்த திசுக்கள் பகுதிநேர அல்லது முழுநேர ஆக்குத்திசுவாக மாறுகின்றன.
இவை இரு வகைப்படும் அவை:
- எளியத்திசு
- கூட்டுத்திசு
I. எளியத்திசு
ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசுக்கள் ஆகும்.
Example:
பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளீரன்கைமா
1. பாரன்கைமா
பாரன்கைமா திசுவின் நீள் மற்றும் குறுக்கு வெட்டுத் தோற்றம்
சம அளவுடைய, மெல்லிய சுவருடைய முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளுடன் கூடிய திசுவாகும். பாரன்கைமா இரு வகைப்படும் அவை:
(i) ஏரன்கைமா, (ii) குளோரன்கைமா
- ஏரன்கைமா நீர்வாழ் தாவரங்களில் பாரன்கைமா காற்றிடைப் பகுதிகளைக் கொண்டுள்ளதால் ஏரன்கைமா எனப்படும்.
- குளோரன்கைமா பாரன்கைமா திசு மீது ஒளிபடும் போது – பசுங்கணிகங்களை உற்பத்தி செய்து குளோரன்கைமாவாக மாறும்.
பாரன்கைமா செய்யும் பணிகள்:
வறண்ட நிலத்தில் வாழும் தாவரங்களில் பாரன்கைமா நீரை சேமிக்கிறது மற்றும் சதைப்பற்றுள்ள பகுதியை உடையது மேலும் உணவு சேமித்தல், உறிஞ்சுதல், மிதத்தல், சுரத்தல் மற்றும் பல பணிகளைச் செய்கிறது.
காய்கறி மற்றும் பழங்களில் பாரன்கைமா செய்யும் பணிகள்:
உருளைக்கிழங்கில் பாரன்கைமா வெற்றிடம் முழுவதும் ஸ்டார்ச்சினால் நிரம்பி உள்ளது. ஆப்பிளில் பாரன்கைமா சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது.
2. கோலன்கைமா
கோலன்கைமா திசுவின் நீள் மற்றும் குறுக்கு வெட்டுத் தோற்றம்
- நீண்ட சதுர அல்லது சிறுத்த முனையுடைய உயிருள்ள செல்கள்.
- சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் கொண்டது.
- பணி: புறத்தோலுக்கடியில் காணப்படுகிறது.
- தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
3. ஸ்கிளீரன்கைமா
ஸ்கிளீரன்கைமா திசுவின் நீள் மற்றும் குறுக்கு வெட்டுத் தோற்றம்
- லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை கொண்டது.
- முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்று காணப்படுகிறது.
- இரு வகைப்படும்: நார்கள், ஸ்கீளிரைடுகள்
நார்கள், ஸ்கீளிரைடுகள்திசுக்கள்
அ. நார்கள்
- நீண்ட ஸ்கிளீரன்கைமா செல்களால் ஆனது.
- செல்சுவர் லிக்னின் பொருளால் ஆனது.
- \(1-3\) mm சில தாவரங்களில் \(20\) மீ முதல் \(550\) மிமீ வரை நீளமுடையவை, இதற்கான எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Example:
கன்னாபினஸ் சட்டைவா (சணல்)
கார்கோரஸ் காப்சுலரிஸ் (ஜீட் வகை)
லின்னம் யுசிட்டாஸ்ஸிமம் (ஆளி)
- பணி: வலு தரும் திசுவாகும். எடுத்துக்காட்டு: சைலம் நார்கள்
ஆ. ஸ்கிளீரைடுகள்
- அகன்று ஒற்றையாகவோ (அ) தொகுப்பாகக் காணப்படும்.
- செல்சுவர் லிக்னின் என்னும் பொருளால் ஆனது குழிகள் நிலைத்த தோற்றத்துடன் காணப்படும்.
- பணி: பழங்கள் மற்றும் விதைகளின் உறைகளில் காணப்படுகிறது.
- தாவரத்திற்கு வலு தரும் திசுவாகும்
Example:
பட்டாணி விதையுறை