PDF chapter test TRY NOW
தொடு சார்பசைவு
புற தொடுதலுக்கு ஏற்ப தாவரத்தின் ஒரு சில பாகங்கள் நகர்தல் தொடுச் சார்பசைவு எனப்படுகிறது. கொடித் தாவரங்கள் பந்தலில் அல்லது ஏதேனும் ஒரு பிடிப்பில் பற்றி வளர்தல் ஆகும்.
Example:
கம்பினைப் பற்றிக் கொடி படர்தல்
கொடியின் இலைக்காம்பு பந்தலில் உள்ள ஒரு பிடிப்பில் பற்றி வளர்தல்
வேதி சார்பசைவு
சில வேதி பொருட்கள் தாவரத்தை தூண்டி அதன் பாகம் அதற்கு ஏற்றவாறு தாவரத்தின் மற்ற பகுதிகள் நகரதல் வேதி சார்பசைவு எனப்படும். சூல்முடியை நோக்கிய மகரந்த குழலின் வளர்ச்சி வேதி வினைகளின் காரணத்தால் நடக்கிறது.
Example:
தாவரத்தில் மகரந்த குழாய் வளர்ச்சி
மகரந்தக் குழல் வளர்தல்
Important!
உவர் நில தாவரங்கள் சில எதிர் புவிச்சார்பசைவு உடையவை. \(180\)° கோணத்தில் செங்குத்தான வேர்கள் இருக்கும். எ.கா: ரைசோபோரா, சுவாச வேர்கள்.
சுவாச வேர்கள்
மேலும், தாவரத்தின் வேர் மற்றும் தண்டின் அசைவுகள் காணலாம்.
- தண்டு - நேர் ஒளி சார்பசைவு, எதிர் புவி சார்பசைவு
- வேர் - எதிர் ஒளி சார்பசைவு, நேர் புவி சார்பசைவு
நேர் மற்றும் எதிர் சார்பசைவுகள்