PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இவ்வகை சார்பசைவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில், இதில் எந்த ஒரு குறிப்பிட்ட திசையும் சாராத அசைவுகளே இருக்கும்.
எந்த ஒரு திசையையும் சாராத தாவரத்தின் அசைவுகளுக்கு திசை சாரா தூண்டல் அசைவு என்று பெயர்.
தூண்டல்களைப் பொறுத்து இது பின்வருமாறு வகைபடுத்தப்படுகின்றது.
 
YCIND08062022_3853_Figure_1.png
தூண்டல்களின் வகைகள்
ஒளியுறு வளைதல் (Photonasty)
தாவரத்தின் ஒரு பகுதியானது ஒளியின் தன்மைக்கு ஏற்ப தங்களின் செயல்களை மாற்றுவது ஒளியுறு வளைதல் எனப்படும்.
Example:
சில தாவர மலர்கள் பகலில் மலர்ந்தும் இரவில் மூடியும் இருக்கும் - டாராக்சம் அஃபிசினேல்  (டான்டிலியான்).
common-dandelion-6386134_1280.jpg
டாராக்சம் அஃபிசினேல்
 
நிலவு மலர் (ஐபோமியா ஆல்பா) எனப்படும் தாவர மலர்கள் பகலில் மூடியும் இரவில் மலர்ந்தும் காணப்படும்.
 
BeFunky-collage.png
ஐபோமியா ஆல்பா
நடுக்கமுறு வளைதல் (Thigmonasty)
புற தொடுதல் மூலம் ஏற்படும் தூண்டலால் தாவரதில் ஏற்படும் மாற்றம் நடுக்கமுறு வளைதல் எனப்படும்.
தொட்டாச் சிணுங்கி நாம் தொட்டவுடன் அதன் இலைகளை சுருக்கிக் கொள்ளும். இது தொடுவுறு வளைதல் அல்லது நடுக்கமுறு வளைதல் பண்பு ஆகும்.
 
shutterstock_677906719.jpg
தொட்டாச் சிணுங்கி தாவரம் (
 
Important!
நடுக்கமுறு வளைதல் அசைவுக்கு டையோனியா மிஃசிபுலா - Dionaea muscipula எனப்படும் வீனஸ் பூச்சிப் பிடிப்பான் அடுத்த ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். மேலும் இது மிக வேகமானதும் ஆகும்.
 
BeFunky-collage (1).png
டையோனியா மிஃசிபுலா - Dionaea muscipula
வெப்பமுறு வளைதல் (Thermonasty)
வெப்பத்தின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவரம் தன் செயலியலை மாற்றி கொள்ளுதல் வெப்பமுறு வளைதல் ஆகும்.
Example:
டூலிப் மலர்கள்  அதிக வெப்பம் இருந்தால் மட்டுமே மலரும்.
shutterstock_1667087161.jpg
டூலிப் மலர்கள்
திசை சார் மற்றும் திசை சாரா அசைவுகளின் வேறுபாடுகள்
திசை சார் அசைவுகள்
  • இவ்வசைவுகள் தூண்டலை பொறுத்த அசைவுகள். 
  • இவை வளர்ச்சியை சார்ந்தது.
  • நிரந்தர மீளாத அசைவுகள்.
  • எல்லா தாவரங்களிலும் உள்ளது. 
  • மெதுவான செயல்பாடு ஆகும்.
திசை சாரா அசைவுகள்
  • இவ்வசைவுகள் தூண்டலை சாராத அசைவுகள்.
  • இது வளர்ச்சியை சாராதது.
  • தற்காலிக மீளும் அசைவுகள்.
  • சில தாவரங்களில் மட்டுமே காணப்படும்.
  • வேகமான செயல்பாடு ஆகும்.