PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநீராவிபோக்கின் அவசியக் காரணிகள்
வாயுப்பரிமாற்றம்:
- இலைகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் ஏற்படுகிறது. இதனை நுண்நோக்கியால் மட்டுமே காண முடியும். காற்றை உள்ள இழுக்கவும் வெளியேற்றவும் இலைத்துளைகள் உதவுகின்றன.
- இலைத்துளைகள் உள்ளே இழுக்கும் வாயு கார்பன்-டை-ஆக்ஸைட் \((CO_2)\). வெளியே விடப்படும் வாயு ஆக்ஸிஜன் \((O_2)\).
நீராவிபோக்கு குறித்த சோதனை:
செய்முறை:
- ஒரு தொட்டி செடியை தண்டில் இருந்து நுனி வரை பாலிதீன் பைக் கொண்டு கட்டி வெயிலில் வைக்கவும்.
- அருகில் வெறும் இருந்து பாலிதீன் பையைக் கட்டி வைக்கவும்.
- இரண்டையும் சூரிய ஒளி படுமாறு வைக்கவும்.
விளைவு:
- சிறிது நேரம் கழித்து தாவரம் உள்ள பையினுள் நீர் திவலைகள் இருப்பதைக் காணமுடியும்.
- வெறும் பையினுள் எதுவும் இருக்காது.
- இதன் மூலம் நாம் நீராவிபோக்கு தாவரத்தில் நடப்பதை கண்டு கொள்ள முடியும்.