
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதாவரத்தின் பகுதிகள் மூலம் நீரானது ஆவியாகிய வெளியேறும் நிகழ்வு நீராவிபோக்கு எனப்படும்.
இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் மூலம் நீராவி வெளியேறும்.

இலைகளில் நீராவிப்போக்கு
இலைத்துளைகள்
இவை இலைகளில் காணப்படும் நுண்ணிய சிறு துளைகள் ஆகும்.

இலைத்துளைகள்
இதன் வழியாக நீராவி வெளியேறும். மேலும் ஒவ்வொரு இலைத்துளைகளும் காப்பு செல்களால் பாதுகாப்பாக சூழப்பட்டு உள்ளன. இந்த துளைகள் திறந்து மூடும் தன்மை கொண்டவை. அதன் மூலம் நீராவிப்போக்கின் சதவீதம் கட்டுப்படுதப்படுகிறது.
நீராவிப்போக்கின் வகைகள்
இதனை ஆங்கிலத்தில், transpiration என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில், ஏறக்குறைய \(90\) - \(95 %\) நீர், இம்முறையில் வெளியேறுகிறது. நீராவிப்போக்கு, மூன்று விதமாகத் தாவரங்களில் நடக்கிறது. இலைத்துளை வழியாகவும், இலைகளில் உள்ள கியூடிக்கிள் வழியாகவும், மற்றும் தாவரங்களின் தண்டுப்பகுதியில் உள்ள பட்டைத்துளை வழியாகவும் நடக்கிறது.

இலைத்துளை நீராவிப்போக்கு

கியூடிக்கிள் நீராவிபோக்கு

பட்டைத்துளை நீராவிபோக்கு