PDF chapter test TRY NOW

பெரும்பாலான கலவைகளில் தேவையான பொருள்கள் தேவையற்ற பொருள்களுடன் கலந்துள்ளது. தேவையுள்ள பொருள்களைப் பெறுவதற்கு வேதியியலாளர் அவற்றை மாசுக்களிலிருந்து (தேவையற்ற பொருள்கள்) பிரித்து எடுத்தார்கள். இவ்வாறு பிரித்தெடுப்பதற்கு தேர்ந்தெடுக்கும் முறையானது அந்தக் கலவையிலுள்ள பகுதிப்பொருள்களின் பண்புகள் மற்றும் இயற்பியல் தன்மைகளைப் பொறுத்து உள்ளது.
  
TCIND22051837609.pngTCIND220518376010.png
 
பலபடித்தான கலவைகள் மற்றும் பிரித்தெடுக்கும் முறைகள்:
  

i. கலவையின் வகை:திண்மம் மற்றும் திண்மம்

பிரித்தெடுக்கும் முறை: கையால் பொறுக்கியெடுத்தல், சலித்தல், காற்றில் தூற்றுதல், காந்தப்பிரிகை, பதங்கமாதல்.

 

ArthurTengShutterstock.jpg

காற்றில் தூற்றுதல்

 

ii. கலவையின் வகை: கரையாத திடப்பொருள் மற்றும் திரவம்

பிரித்தெடுக்கும் முறை: வீழ்படிவாதல் மற்றும் தெளிய வைத்து இறுத்தல், ஏற்றுதல், வடிகட்டுதல், மைய விலக்கல். 

  

TCIND22051837607.png

வடிகட்டுதல்

  

iii. கலவையின் வகை: ஒன்றாகக் கலவாத திரவங்கள்

பிரித்தெடுக்கும் முறை: தெளிய வைத்து இறுத்தல், கரைப்பான் சாறு இறக்கல்.

  

TCIND22051837606.png

  

ஒருபடித்தான கலவைகள் மற்றும் பிரித்தெடுக்கும் முறைகள்:

 

i. கலவையின் வகை: கரையும் திடப்பொருள் மற்றும் திரவம்

பிரித்தெடுக்கும் முறை: ஆவியாதல், காய்ச்சி வடித்தல், படிகமாக்கல்.

  

shutterstock1750680020 (2).jpg

ஆவியாதல்

 

ii. கலவையின் வகை: கலக்கும் பண்புள்ள திரவங்கள்
பிரித்தெடுக்கும் முறை: பின்னக் காய்ச்சி வடித்தல்.

  

YCIND22052022_3759_Ramamoorthi - Matter around us (Tamil 9th 2)_13.png

பின்னக் காய்ச்சி வடித்தல் 

 

iii. கலவையின் வகை: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திடப்பொருட்கள் கொண்ட கரைசல்

பிரித்தெடுக்கும் முறை: வண்ணப்பிரிகை முறை

  

shutterstock724010728.jpg

வண்ணப்பிரிகை முறை