PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் பெரும்பாலும் கலவைகளாகும். சிலவற்றின் பகுதிப்பொருட்களை நம் கண்களால் பார்க்க இயலும், ஆனால் பெரும்பாலான கலவைகளின் பல்வேறு பகுதிப்பொருட்களை நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. அவை பார்ப்பதற்கு ஒரே வகையான இயைபைப் பெற்றிருப்பது போல் தெரியும்.
கலவையின் வகைகள்
மேற்கண்ட கருத்தை அடிப்படையாகக்
கொண்டு கலவைகள் இரு வகைகளாக
வகைப்படுத்தப்படுகின்றன. அவை,
ஒருபடித்தான கலவை:
ஒருபடித்தான கலவையில் அதன் பகுதிப்பொருட்களை தனித்தனியாகப் பார்க்க இயலாது. இக்கலவையில் பகுதிப்பொருட்கள் சீராகக் கலந்து ஒத்த பண்புகளைப் பெற்றிருக்கும்.
Example:
எ. கா.:குழாய் நீர், பால், காற்று, பனிக்கூழ், சர்க்கரைப் பாகு, மை, எஃகு, வெண்கலம் மற்றும் உப்பு நீர் போன்றவை ஒருபடித்தான கலவைகள் ஆகும்.
உப்பு நீர்
மேலும் ஒருபடித்தான கலவையை இரு வகைகளாக பிரிக்கலாம் அவை,
i. உண்மைக் கரைசல்கள்
ii. உலோகக் கலவைகள்
பலபடித்தான கலவை:
பலபடித்தான கலவையில் அதன் பகுதிப் பொருட்களை தனித்தனியாக பார்க்க இயலும். இக்கலவையின் பகுதி பொருட்கள் சீராக கலந்திருப்பதுமில்லை; ஒத்த பண்புகளைப் பெற்றிருப்பதுமில்லை.
Example:
எ. கா.: மண், அயோடின் மற்றும் உப்புக் கலவை, சர்க்கரை மற்றும் மணல் கலவை, நீர் மற்றும் எண்ணெய் கலவை, சல்ஃபர் மற்றும் இரும்புத்தூள் கலவை, பால் மற்றும் தானியக் கலவை போன்றவை பலபடித்தான கலவைகள் ஆகும்.
சல்ஃபர் மற்றும் இரும்புத்தூள் கலவை
மேலும் பலபடித்தான கலவையை இரு வகைகளாக பிரிக்கலாம் அவை,
i. தொங்கல்கள்
ii. கூழ்மங்கள்