PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நமது சுற்றுப்புறத்தை பார்க்கும்போது பல்வேறு வடிவங்களில், அளவுகளில், அமைப்புகளில் மற்றும் நிறங்களில் வேறுபட்ட பல வகையான பொருட்கள் வெவ்வேறு பகுதிப்பொருட்கள் உருவாகி இருப்பதை காண்போம். சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, மேகம், தாவரங்கள், விலங்குகள், ஒரு துளி நீர், மணல் கூறு ஆகிய அனைத்தும் பருப்பொருளாகும். நுண்ணிய பாக்டீரியாவிலிருந்து மிகப்பெரிய கோள்கள் வரையுள்ள நிறை மற்றும் இடத்தை (கனஅளவு) அடைத்துக்கொள்ளும் அனைத்தும் பருப்பொருளாகும்.
 
windfall-fruit-gc9d88ca94_1920.jpgt-shirt-g7032fbe0d_1920.jpg
பருப்பொருட்கள்
 
பண்டைய காலத்தில் பருப்பொருட்களின் கூற்று:
 
பழங்காலம் முதல் மனிதர்கள் சுற்றுப்புறத்தை புரிந்து கொள்ள முயன்று கொண்டு வருகிறார்கள். பண்டைய இந்திய தத்துவஞானிகள் பருப்பொருட்களை ஐந்து அடிப்படை கூறுகளாக பிரித்து வைத்துள்ளன. தொல்காப்பியம் என்ற நூலில், இந்த உலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் எனும் ஐம்பெரும் கூறுகளின் கலவையாலானது என்று கூறுகிறது. உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் ஐந்து அடிப்படை கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்கால கிரேக்க தத்துவஞானிகளும் பருப்பொருட்களை இவ்வாறே வகைப்படுத்தினர். இப்போது பருப்பொருட்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

  

பருப்பொருட்களின் வகைகள்:

 

TCIND22051837604.png

 

1. தூய்மையான பொருட்கள்:

 

i. தனிமங்கள் - எளிய பொருள்களாக உடைக்க முடியாது. 

Example:

எ.கா.: காப்பர், ஹைட்ரஜன், ஆக்சிஜன்.

ii. சேர்மங்கள் - நிலையான இயைபைக் கொண்டது. வேதி அல்லது மின் வேதி வினைகள் மூலம் எளிய பொருள்களாக மாற்ற இயலும். 

Example:

எ.கா.: நீர், சர்க்கரை, உப்பு.

2. தூய்மையற்ற பொருட்கள் (கலவைகள்):

 

i. ஒருபடித்தானவை கலவை  - சீரான  இயைபு.

Example:
எ.கா.: சர்க்கரை + நீர், நீர் +ஆல்கஹால்.

ii. பலபடித்தானவை கலவை - சீரற்ற இயைபு.

Example:
எ.கா.: மணல் + சர்க்கரை, நீர் + எண்ணெய்.

பருப்பொருட்கள் பற்றிய பல்வேறு கருத்துகள்:

  

 i. \(1803\)ல் ஜான் டால்டன் அணுக்கொள்கையை கூறிய பின்னரும் பருப்பொருட்கள் பார்ப்பதற்கு மிகச்சிறியவை என்றும் வெவ்வேறான துகள்களாலானவை என்றும் எவரும் நிரூபிக்கவில்லை.

 

ii. \(1827\)ல் ஸ்காட்லாந்து தாவரவியல் வல்லுநர் இராபர்ட் பிரௌன், அவர் ஒரு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி மகரந்தத்துகள்கள் நீரில் ஒழுங்கற்ற முறையில் நகர்வதைக் கண்டார். மகரந்தத்துகள்களின் இந்த பிறழ்ச்சியான நகர்வானது பிரௌனியன் நகர்வு என அறியப்பட்டது.

 

iii. \(1905\)ல் இயற்பியல் வல்லுநர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மகரந்த துகளானது தனியான நீர் துகள்கள் (அ) மூலக்கூறுகளால் நகர்கின்றன என்பதை விளக்கினார் . இது, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்து, அவை துகள்கள் கொள்கை மற்றும் துகள்கள் தொடர்ச்சியான நகர்வில் உள்ளது என்பதற்கான சான்றையும் அளிக்கிறது.
இன்று நாம் , காணும் அணுககள் மற்றும் மூலக்கூறுகள் என்பவை வெறும் கற்பனையல்ல என்பதை பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளார். அதிநவீன முறைகள், அதாவது அலகீட்டு மின்னணு நுண்ணோக்கி (SEM), ஊடுரு மின்னணு  நுண்ணோக்கி (TEM) போன்றவை மூலம் அணுக்கள்  மற்றும் மூலக்கூறுகள் என்பவை வெறும் கற்பனையல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளது.