PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனவை. அணுக்கள் சிறியதுகள்கள் அவை தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இவை குறைந்த இடைப்பட்ட தூரத்தில் ஒன்றொடு ஒன்று கவரப்படுகின்றன. ஆனால் இவை மிக நெருக்கமாக வரும் போது விலக்கப்படுகின்றன.
பருபொருளின் வகைகள்
மிக முக்கியமான கண்டுபிடிப்பு ரிச்சர்ட் ஃபெயின்மென், புகழ் வாய்ந்த மற்றும் மிகச் சிறந்த அறிவியல் அறிஞர் (\(1918-1988\)) கூறியது: கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அறிவியலின் மிக முக்கிய கண்டுபிடிப்பு அணுவினுடைய நிலைபாடு என கூறினார்.
ஒரு நெல் மணியளவு எளிய உப்பில் துகள்கள் உள்ளன. அதில் பாதியளவு சோடியம் துகள்களும் மற்றும் பாதி குளோரைடு துகள்களும் உள்ளன.
உப்பு
ஒரு சிட்டிகை பொட்டாசியம் பெர்மாங்கனேட்
படிகத்தை நீருள்ள முகவையில் போடவம் நிகழ்வு மற்றும் காற்றுள்ள திறந்த வாயு சாடி ஒன்றினை
சிறிதளவு புரோமின் வாயு அல்லது வேறு
ஏதாவது நிறமுள்ள வாயுசாடியின் மேல்
தலைகீழாக வைக்கும் நிகழ்வு போன்ற
ஒவ்வொரு நேர்விலும், துகள்கள் இயக்கத்தில் இருப்பதையும், அவைகள் ஒன்றொடொன்று மோதும் மற்றும் எல்லா திசைகளிலும் எழும், இதுவே துகள்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்தச்செயலானது நிகழ்ந்திருக்காது. எனவே இது விரவுதல் எனப்படுகிறது.
விரவுதல்
திட, திரவ மற்றும் வாயுக்களின் இயக்க கொள்கை:
திட, திரவ மற்றும் வாயுக்களின் இயக்கம்
திண்மம்:
திடப்பொருள்கள் ஏன் நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன. துகள்களின் இயக்கக் கொள்கைப்படி, திண்மப் பருப்பொருள்களின் துகள்கள்,
(i). மிக நெருக்கமாகவும், வரிசையாகவும் அடுக்கப்பட்டுள்ளது.
(ii). வலுவான கவர்ச்சி விசையினால் இணைக்கப்பட்டுள்ளது.
(iii). துகள்கள் போதுமான இயக்க ஆற்றலை பெற்றிருப்பதால் அவை நிலையான இடத்திலிருந்து அதிர்வுறவும், சுழலவும் முடியும்.
(iv). தன்னிச்சையாக (தனியாக) நகர முடியாது.
ஏன் திண்மங்கள் நிலையான கனஅளவைப் பெற்றுள்ளது?
திண்மங்களில் துகள்களுக்கிடையேயுள்ள இடைவெளியானது குறைவாக இருப்பதால் திண்மங்களை அழுத்த முடியாது. அவை ஒன்றொடு ஒன்று நெருக்கமாக சேர்ந்து உள்ளன. இதனால் துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைவு. எனவே திண்மங்கள் நிலையான கனஅளவைக் கொண்டுள்ளது.