PDF chapter test TRY NOW
சில திடப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது, அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாற்றமடைகிறது. ஆவியைக் குளிர வைக்கும் போது மீண்டும் திண்மத்தைத் தருகிறது. இந்நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.
Example:
எ.கா.: அயோடின், கற்பூரம், அம்மோனியம் குளோரைடு.
கற்பூரம்
பதங்கமாதலுக்கான செய்முறை விளக்கம்:
i. நன்கு தூளாக்கப்பட்ட அம்மோனியம் குளோரைடு மற்றும் மணல் கலவை, கொண்ட ஒரு பீங்கான் கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ii. அதன் மேல் துளையுடைய கல்நார் தகட்டினால் மூடி வைக்கப்படுகிறது. கல்நார்த் தகட்டின் மேல் புனல் ஒன்று கவிழ்த்து வைக்கப்படுகிறது.
iii. புனலின் திறந்த முனையானது பஞ்சினால் அடைக்கப்பட்டு, பீங்கான் கிண்ணம் கவனத்துடன் வெப்பப்படுத்தப்படுகிறது.
iv. எளிதில் ஆவியாகக் கூடிய திண்மத்தின் ஆவி கல்நார்த் தகட்டில் உள்ள துளைகளின் வழியாகச் சென்று புனலின் உள்பக்கத்தில் குளிர்கிறது. ஆவியாகாத மாசுக்கள் பீங்கான் கிண்ணத்திலேயே தங்கி விடுகிறது.
பதங்கமாதல்
அன்றாட வாழ்வில் பதங்கமாதல் நிகழ்வு:
கழிவறைகளில் காற்று தூய்மையாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள திண்மம் மெதுவாக பதங்கமாகி நறுமணமுள்ள வாயுவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெளியிடுவதன் மூலம் கழிவறையை நறுமணத்துடன் வைக்கிறது. நாஃப்தலீனை உள்ளடக்கிய அந்துருண்டை, பூச்சிகளை விரட்டப் பயன்படுகிறது. இதில் உள்ள நாஃப்தலீன் பதங்கமாகி வாயுவாக மாறுகிறது. இதே போன்று, இந்தியர்களின் வீடுகளில் பயன்படும் கற்பூரம் பதங்கமாதலுக்குட்பட்டு நறுமணத்தைத் தரவல்லது.
நாஃப்தலீன்