
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமையவிலக்கு முறை நிகழ்வு:
இந்த முறையானது திரவத்தில் எளிதில் படியாத மிகச் சீரான மற்றும் மிகச்சிறிய திடத் துகள்களைப் பிரிக்கப் பயன்படுகிறது. திரவ கலவையை மைய விலக்கு இயந்திரத்தில் உள்ள மைய விலக்குக் குழாயில் எடுத்துக் கொள்ளப்பட்டு வேகமான சுழற்சியின் மூலம் மையவிலக்குக்கு உட்படுத்தப்படுகிறது (சுழற்றப்படுகிறது). சுழலும்போது குழாயின் அடியில் திடப்பொருள் படிகிறது; மற்றும் மேலே உள்ள தெளிந்த நீர்மம் வடிக்கப்படுகிறது.

மையவிலக்கு இயந்திரம்
மையவிலக்கு முறையின் பயன்கள்:
i. பால் பொருள்களில் பாலாடையையும், கொழுப்பினையும் நீக்கி பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்க பயன்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட பால்
ii. சலவை இயந்திரங்களில் இம்முறையின் மூலமே ஈரத்துணியிலிருக்கும் நீர் பிழிந்து வெளியேற்றப்படுகிறது.

சலவை இயந்திரம்
iii. நோய் கண்டறியவும், இரத்தத்திலிருந்து இரத்த செல்களைப் பிரித்தெடுக்கவும் பரிசோதனைக் கூடங்களில் இம்முறை உதவுகிறது.

பரிசோதனைக் கூடம்