PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொதிநிலை வேறுபாடு இல்லாத கரையக்கூடிய திரவங்களை பிரிக்க பின்னக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது.
குறிப்பு: கொதிநிலை வித்தியாசம் 25K க்கு குறைவாக இருக்க வேண்டும்.
பின்னக் காய்ச்சி வடித்தலின் பயன்கள்:
பெட்ரோலிய வேதித் தொழிற்சாலையில் பெட்ரோலிய பின்னங்கள், காற்றிலிருந்து வாயுக்கள், மெத்தில் ஆல்கஹால் மற்றும் எத்தில் ஆல்கஹால் ஆகியவற்றைப் பிரித்தெடுக்க பின்னக்காய்ச்சி வடித்தல் முறை பெரிதும் பயன்படுகிறது.
பின்னக்காய்ச்சி வடித்தல் முறையின் பயன்கள்
வண்ணப்பிரிகை முறை:
வண்ணப்பிரிகை முறையின் தொழில்
நுட்பத்தை கற்பதற்க்கு முன் அதில்
பயன்படுத்தப்படும் இரு முக்கியமான
சொற்றொடர்களைப் அறிவோம். அவை:
உறிஞ்சுதல் மற்றும் பரப்புக் கவர்தல்.
உறிஞ்சுதல் என்பது ஒரு பொருள் பெருமளவில் மற்றொரு பொருளால் உட்கவரப்படும் நிகழ்வு ஆகும்.
Example:
எ.கா.: நீரில் விழும் காகிதம் உறிஞ்சியாகச் செயல்பட்டு நீரை உறிஞ்சுகிறது.
பரப்புக் கவர்தல் என்பது ஒரு பொருளின் மேற்பரப்பில் மற்றொரு பொருளின் துகள்கள் கவரப்படும் நிகழ்வு ஆகும்.
Example:
எ.கா.: ஒரு சுண்ணக்கட்டித் துண்டினை நீலநிற மையினுள் ஊறவைக்கும் போது அதன் மேற்பரப்பு நீல நிற மூலக்கூறுகளைப் பரப்புக்கவர்ந்து கொள்கிறது. உட்புறம் மையின் கரைப்பான் மூலக்கூறுகளை ஆழமாக உறிஞ்சிக் கொள்கிறது. எனவே, ஊறவைத்த சுண்ணக்கட்டியினை உடைத்தால் உட்புறம் நிறமற்றதாகவும், மேற்பரப்பு நீல நிறமாகவும் தெரியும்.
வண்ணப்பிரிகை முறையின் சிறப்புகள்:
i. இது ஒரு பிரித்தெடுக்கும் தொழில் நுட்பமாகும்.
ii. ஒரு கலவையிலுள்ள பல்வேறு கூறுகள், ஒரே கரைப்பானில், வெவ்வேறாகக் கரையும் திறனைப் பெற்றிருக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது.
iii. ஒரே தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் பல்வேறு வகையான வண்ணப் பிரிகை முறைகள் உள்ளது.
iv. தாள் வண்ணப்பிரிகை முறை என்பது எளிமையான வகையாகும்.
i. எழுதும் மையில் உள்ள பல்வேறு நிறமுள்ள சாயங்களைப் பிரித்தெடுக்க ஒரு வண்ணப்பிரிகைத் தாளில் ஒரு துளி எழுதும் (கருப்பு நிற) மை இடப்படுகிறது.
ii. இந்தத் தாள் தகுந்த கரைப்பானில் வைக்கப்படுகிறது. கருப்பு நிற மை அதன் பகுதி சாயங்களாகப் பிரிகிறது.
iii. தாளின் மீது கரைப்பான் மேலேறும்போது, சாயங்கள் அதனுடன் எடுத்துச் செல்லப்பட்டு பிரிகையடைகிறது.
தாள் வண்ணப்பிரிகை முறை
iv. கரைப்பானில், சாயங்கள் வெவ்வேறான கரையும் தன்மை கொண்டுள்ளதால், அவை வண்ணப்பிரிகைத் தாளில் வெவ்வேறு எல்லைகளுக்குப் பரப்பு கவரப்பட்டு பிரித்தெடுக்கப் படுகிறது இவ்வாறு கிடைக்கப் பெற்ற வண்ணப்பிரிகை வரைபடம், கருப்பு நிற மையானது மூன்று சாயங்களைக் காட்டுகிறது.