PDF chapter test TRY NOW
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருள்கள் சேர்ந்த ஒருபடித்தான கலவையே கரைசல் ஆகும்.
கரைசல்கள்
ஒரு கரைசலில் எந்தப் பொருள் குறைந்த அளவு நிறையில் உள்ளதோ அது கரைபொருள் எனவும், எந்தப் பொருள் அதிக அளவு நிறையில் உள்ளதோ அது கரைப்பான் எனவும் அழைக்கப்படுகிறது.
கரைசல் என்பதனைக் பின்வருமாறு குறிப்பிடலாம்.
கரைபொருள் + கரைப்பான் → கரைசல்
Example:
எ.கா.: உப்பு + நீர் உப்புக் கரைசல்
கரைசாலின் வகைகள்:
கரைசலில் உள்ள கரைப்பொருள் துகள்களின் அளவைப் பொறுத்து, கரைசல்களை மூன்று வகையாக பிரிக்கலாம் அவை முறையே உண்மைக் கரைசல், கூழ்மக்கரைசல், மற்றும் தொங்கல் என்பனவாகும்.
கரைசலின் வகைகள்
i. உண்மைக் கரைசல்
சர்க்கரைக் கரைசலை உற்று நோக்கினால், அது தெளிவான கரைசலாக இருப்பதைக் நாம் காணமுடியும். மேலும் அக்கரைசலில் துகள்கள் படிவதில்லை எனவே இக்கரைசல் உண்மைக் கரைசல் என்று அழைக்கப்படுகிறது.
சர்க்கரைக் கரைசல்
ii. கூழ்மக்கரைசல்
ஸ்டார்ச் மற்றும் நீர்க் கலவையை எடுத்துக்கொண்டால், அது மேகம் போன்று தோன்றும். இவ்வகையான கரைசல் கூழ்மக்கரைசல் என்று அழைக்கப்படுகிறது.
கூழ்மக்கரைசல்
iii. தொங்கல்
கோதுமை மாவை நீரில் கலக்கும்போது, தொடக்கத்தில் கலங்கலான கலவை உருவாகிறது. சிறிது நேரத்திற்குப் பின் அதன் நுண்ணிய துகள்கள் அடியில் படிகின்றன. இக்கரைசல் தொங்கல் என்று அழைக்கப்படுகிறது.
தொங்கல்