PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகரைசல்களுக்கிடையான வேறுபாடு:
உண்மைக் கரைசல்கள், தொங்கல்கள் மற்றும் கூழ்மங்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள முக்கியமான வேறுபாடு அவற்றின் துகள்களின் உருவ அளவு ஆகும். அவற்றின் உருவ அளவை மாற்றுவதன் மூலம், இக்கரைசல்கள் ஒன்றை மற்றொன்றாக மாற்றுவதும் சாத்தியமாகும்.
கரைசல்களின் துகள்களின் உருவ அளவு
தொங்கல், கூழ்ம மற்றும் உண்மைக் கரைசல்களுக்கிடையான வேறுபாடுகள்:
i. தொங்கலின் பண்புகள்:
துகளின் உருவ அளவு - >100nm
வடிகட்டி பிரித்தல் - இயலும்
துகள்கள் படிதல் - தானாகவே படியும்
தோற்றம் - ஒளி உட்புகாதது
ஒளியை சிதறடித்தல் - ஒளி உட்புகாது
துகள்கள் விரவுதல் - விரவுவதில்லை
பிரௌனியன் இயக்கம் - நடைபெறலாம்
தன்மை - பலபடித்தானவை
ii. கூழ்மக்கரைசலின் பண்புகள்:
துகளின் உருவ அளவு - 1 லிருந்து 100nm
வடிகட்டி பிரித்தல் - இயலாது
துகள்கள் படிதல் - மைய விலக்கம் செய்தால் படியும்
தோற்றம் - பகுதி ஒளி ஊடுருவக் கூடியது
ஒளியை சிதறடித்தல் - சிதறடிக்கும்
துகள்கள் விரவுதல் - மெதுவாக விரவுகிறது
பிரௌனியன் இயக்கம் - நடைபெறுகிறது
தன்மை - பலபடித்தானவை
iii. உண்மைக் கரைசலின் பண்புகள்:
துகளின் உருவ அளவு - <1nm
வடிகட்டி பிரித்தல் - இயலாது
துகள்கள் படிதல் - படியாது
தோற்றம் - ஒளி ஊடுறுவக் கூடியது
ஒளியை சிதறடித்தல் - சிதறடிக்காது
துகள்கள் விரவுதல் - வேகமாக விரவுகிறது
பிரௌனியன் இயக்கம் - நடைபெறாது
தன்மை - ஒருபடிபத்தானவை