PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதசையாலான, சுருண்ட மற்றும் குழாய் போன்ற வடிவ அமைப்பே உணவுப் பாதையாகும்.
உணவு பாதையின் உறுப்புகள்:
- வாய்
- வாய்க்குழி
- தொண்டை
- உணவுக்குழாய்
- இரைப்பை
- சிறுகுடல் (முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல்)
- பெருங்குடல் (குடல்வால், கோலன் மற்றும் மலக்குடல்)
- மலவாய்
1. வாய்:
அமைப்பு:
உணவுப் பாதையின் ஆரம்ப அல்லது தொடக்க வழி வாயாகும். இங்கு தான் வாய்க்குழி தொடங்கும் அதோடு இவை இரு மென்மையான மேல் மற்றும் கீழ் உதடுகளால் இணைக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் கீழ் உதடுகள் மென்மையான அசையும் தன்மையுடன் காணப்படும். வாய்க்குழி பெரிய இடைவெளியோடு மேல் பகுதி அண்ணம் (காற்றுக் குழாயையும் உணவுக் குழாயையும் பிரிக்கும் பகுதி), கீழ்ப்பகுதி தொண்டை, பக்கப்பகுதி தாடைகள் போன்றவை மூலம் இணைக்கப்பட்டிருக்கும். பற்களைத் தாடைகள் தாங்கியிருக்கும்.
வாய்
2. பற்கள்:
உணவைக் கடிப்பதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் பற்கள் பயன்படுகிறது. இவை கடினமான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.
பற்கள்
மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு பகுதிகளாக (இரட்டைப் பல்வரிசை) பிரிக்கப்படுகிறது:
குழந்தை பருவத்தின் தொடக்கத்தில் தற்காலிக இணைப்பற்கள் அல்லது பால் பற்கள் உருவாகிறது. மேலும் எட்டு வயது கடந்த பின் தற்காலிக பால் பற்களுக்குப் பதில், இரண்டாம் தொகுப்பில் முப்பத்திரெண்டு நிரந்தர பற்கள் (கலப்பு பல் வரிசை) தோன்றுகிறது. இவைகள் ஒவ்வொரு தாடைக்கும் பதினாறு பற்கள் வீதமாகக் காணப்படும். ஒவ்வொரு பற்களும் ஒரு வேரினைக் கொண்டு அதன் ஈறுகளில் (திகோடான்ட்) பொருத்தப்பட்டிருக்கும்.
நிரந்த பற்கள் அதன் அமைப்பு மற்றும் பணிகளின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
- வெட்டுப்பற்கள்
- கோரைப்பற்கள்
- முன்கடைவாய்ப் பற்கள்
- பின் கடைவாய்ப் பற்கள்
பற்களின் வகைகளும் அவற்றின் பணிகளும்
1. வெட்டுப்பற்கள்:
பற்களின் எண்ணிக்கை: \(8\)
பணிகள்: உணவை வெட்டவும் மற்றும் கடிக்கவும் பயன்படுகிறது. தாவர உண்ணிகளில் வெட்டுப் பற்கள் நன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது.
2. கோரைப்பற்கள்:
பற்களின் எண்ணிக்கை: \(4\)
பணிகள்: உணவைக் கிழிக்கவும் மற்றும் துளையிடவும் பயன்படுகிறது. மாமிச உண்ணிகளில் கோரைப்பற்கள் நன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது.
3. முன்கடைவாய்ப் பற்கள்:
பற்களின் எண்ணிக்கை: \(8\)
பணிகள்: உணவை நசுக்கவும் மற்றும் அரைக்கவும் பயன்படுகிறது.
4. பின் கடைவாய்ப் பற்கள்:
பற்களின் எண்ணிக்கை: \(12\)
பணிகள்: உணவை நசுக்கவும், அரைக்கவும் மற்றும் மெல்லவும் பயன்படுகிறது.
பல் சூத்திரம்:
ஒவ்வொரு மேல் மற்றும் கீழ்தாடை பகுதியில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ள பல்வேறு பற்களின் வகைகளான வெட்டுப்பற்கள் (\(வெ\)),கோரைப்பற்கள் (\(கோ\)), முன் கடைவாய்ப் பற்கள் (\(முக\)) மற்றும் பின்கடைவாய் பற்கள் (\(பிக\)) போன்றவை குறிக்கப்படுகிறது. இதுவே பல் சூத்திரம் எனப்படும்.
பற்களின் வகைகள்
பால் பற்களில் ஒவ்வொரு பாதி கீழ் மற்றும் மேல் தாடைக்குப் பல் சூத்திரமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
நிரந்தர பற்களில் ஒவ்வொரு பாதி கீழ் மற்றும் மேல் தாடைக்குப் பல் சூத்திரமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது: