PDF chapter test TRY NOW

உமிழ்நீர்ச் சுரப்பிகள்:
 
நாம் உட்கொள்ளப்பட்ட உணவின் முதல் செரிமானம் வாய்க்குழியில் தொடங்குகிறது. அதற்கு உமிழ்நீர் (Saliva) உதவுகிறது. உமிழ்நீரைச் சுரப்பது உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகும். நமக்கு மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன.
 
YCIND_221202_4782_salivary gland.png
உமிழ்நீர்ச் சுரப்பிகள்
 
அவை ஒவ்வொன்றும் அமைப்பிலும் பணியிலும் தனித்தன்மை வாய்ந்தவை.
  1. மேலண்ணச் சுரப்பி
  2. நாவடிச் சுரப்பி
  3. தாடைச் சுரப்பி
1. மேலண்ணச் சுரப்பி:

 

இவை மொத்தம் இரண்டு சுரப்பிகளைக் கொண்டது. அவை ஒவ்வொரு காதுக்குக் கீழாகவும் முன்புறமாகவும் கீழ்த்தாடையின் பின்புறமாகவும் அமைந்துள்ளது. இவை 'செவிமுன் சுரப்பிகள்' (Parotid glands) என்று அழைக்கப்படும். இச்சுரப்பி மூன்று சுரப்பிகளில் மிகப்பெரிய சுரப்பியாகும். இது தலா \(25\) கிராம் எடை கொண்டவை. ஆனாலும், இவை \(20\) சதவீத அளவு மட்டுமே உமிழ்நீரைச் சுரக்கிறது.

 

2. நாவடிச் சுரப்பி:

 
இது நாக்கின் அடிப்பகுதியில் காணப்படும் மிகச் சிறிய சுரப்பியாகும். இது தலா \(3\) கிராம் எடை கொண்டவை. இவை \(5\) சதவீத அளவு மட்டுமே உமிழ்நீரைச் சுரக்கிறது.
 
3. கீழ் மற்றும் மேல் தாடைச் சுரப்பிகள்:
 
கீழ்த்தாடையின் இருபுறத்திலும் பக்கத்துக்கு ஒன்றாக இருப்பது, ‘தாடை அடிச்சுரப்பி’ (Sub mandibular gland) ஆகும். இதன் எடை \(10\) கிராம். இந்தச் சுரப்பிகள் தான் அதிக அளவில் \(70\) சதவீதம் உமிழ்நீரைச் சுரக்கிறது. இந்த முதன்மை உமிழ்நீர்ச் சுரப்பிகளைத் தவிர, வாய்க்குள் கன்னம், அண்ணம், உதடு, நாக்கின் கீழ்ப்பகுதி ஆகியவற்றிலும் மிகச் சிறிய உமிழ்நீர்ச் சுரப்பிகள் \(800\) லிருந்து \(1,000\) வரை உள்ளன.
 
உமிழ்நீர்ச் சுரப்பிகள்
மனிதனின் உடலில் ஒரு நாளைக்கு உமிழ்நீர்ச் சுரப்பிகள் சுமார் \(1.5\) லிட்டர் நிறமற்ற  பிசுபிசுப்பான அல்லது வழவழப்பான திரவத்தினை சுரக்கிறது. இதுவே உமிழ்நீர் என்று அழைக்கப்படும்.
உமிழ்நீரில் இரண்டு நொதிகள் காணப்படுகிறது, அவை:
  1. டையலின் (அமிலேஸ்) நொதி: இது ஸ்டார்ச்சை (கூட்டுச்சர்க்கரை) மால்டோசாக (இரட்டைச் சர்க்கரை) மாற்றுகிறது.
  2. லைசோசைம் நொதி: பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
நாக்கு:
மனிதனின் உடலில் உள்ள ஐந்து உணர்ச்சி உறுப்புகளில் நாக்கும் ஒன்றாகும். இது உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத் தசையாலானது.
பணிகள்:
 
Taste.png
நாக்கின் பலவிதமான சுவையறியும் பகுதிகள்
 
வாயில் ஊறும் உமிழ்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும். மேலும் நாக்கு வாய்க்குழியில் சுரக்கும் உமிழ்நீருடன் உணவைச் சேர்ந்து மெல்லவும் மற்றும் நாவில் உள்ள சுவை மொட்டுகள் மூலம் உணவின் சுவையை அறியவும் உதவுகிறது. உணவுக்கவளம் என்று அழைக்கப்படும் மென்ற உணவை நாக்கின் மூலம் உருட்டப்பட்டு தொண்டை வழியாக விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளும். இவ்வாறு விழுங்கப்படும் உணவானது, மூச்சுக் குழலுக்குள் உணவு போய் விடாதபடி குரல்வளை மூடியானது தடுக்கிறது.