PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
DesignYCIND10w850.png
உறுப்பு மண்டலங்கள்
 
1. புறச்சட்டக மண்டலம்:
 
உறுப்புகள்: தோல் மற்றும் தோல் சுரப்பிகள்  
  
செயல்பாடுகள்: உறுப்புகளை பாதுகாப்பதோடு கழிவு நீக்க உறுப்பாகவும் செயல்படுகின்றது.

2. எலும்பு மண்டலம்:
  
உறுப்புகள்: மண்டை ஓடு, முதுகெலும்புத் தொடர், மார்பெலும்பு, வளையங்கள் மூட்டுகள்
 
செயல்பாடுகள்: ஆதாரம், வடிவம் மற்றும் உடலுக்கு ஓர் அமைப்பைத் தருகின்றது.
 
3. தசை மண்டலம்:
 
உறுப்புகள்: தசை நார்கள்
 
செயல்பாடுகள்: சுருங்குதல் மற்றும் தளர்வு காரணமாக செயல்படும்.
 
4. நரம்பு மண்டலம்:
 
உறுப்புகள்: மூளை, தண்டுவடம், நரம்புகள்
 
செயல்பாடுகள்: நரம்புத் தூண்டுணர்வைக் கடத்த உதவுகின்றன.
 
5. இரத்த ஓட்ட மண்டலம்:
 
உறுப்புகள்: இதயம், இரத்தம் மற்றும் இரத்தக் குழாய்கள்
 
செயல்பாடுகள்: சுவாச வாயுக்கள், ஊட்டச்சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்றவற்றை கடத்தும்.
 
6. சுவாச மண்டலம்:
 
உறுப்புகள்: சுவாசப் பாதை மற்றும் நுரையீரல்
 
செயல்பாடுகள்: சுவாசம் நடைபெற உதவுகின்றன.
 
7. செரிமான மண்டலம்:
 
உறுப்புகள்: செரிமானப்பாதை மற்றும் செரிமானச்சுரப்பிகள்
 
செயல்பாடுகள்: செரிமானம், உட்கிரகித்தல் மற்றும் மலம் வெளியேற உதவுகின்றன.
 
 8. கழிவு நீக்க மண்டலம்:
 
உறுப்புகள்: சிறுநீரகம், சிறுநீர்க் குழாய்கள், சிறு நீர்ப்பை, சிறு நீர்ப் புற வழி
 
செயல்பாடுகள்: நைட்ரஜன் போன்ற கழிவுப் பொருட்களை நீக்கும் உறுப்பாக செயல்படுகின்றன.
 
9. இனப்பெருக்க மண்டலம்:
 
உறுப்புகள்: விந்தகம் மற்றும் அண்டகம்
 
செயல்பாடுகள்: பாலின உயிரணு உருவாக்கம் மற்றும் இரண்டாம் பாலினப் பண்பு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
 
10. உணர்ச்சி மண்டலம்:
 
உறுப்புகள்: கண், மூக்கு, காது, நாக்கு மற்றும் தோல்
 
செயல்பாடுகள்: பார்த்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல் மற்றும் தொடுதல் செயல்களை செய்கின்றன.
 
11. நாளமில்லா சுரப்பி மண்டலம்:
 
உறுப்புகள்: பிட்யூட்டரி, தைராய்டு, பாராதைராய்டு, அட்ரினல், கணையம், பீனியல் சுரப்பி, தைமஸ், இனப்பெருக்க சுரப்பிகள்
 
செயல்பாடுகள்: அனைத்து உறுப்பு மண்டலங்களின் பணிகளை ஒருங்கிணைக்கிறது.