PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசெல் என்பது ஒரு உயிரினத்தின் அடிப்படை அலகு ஆகும்.
செல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து திசுக்களாகவும், திசுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உறுப்பாகவும், உறுப்புகளெல்லாம் இணைந்து உறுப்பு மண்டலங்களாகவும், உறுப்பு மண்டலங்கள் அனைத்தும் இணைந்து ஒரு முழு உயிரினமாக உருவாகிறது.
செல்
இந்த உலகில் உருவாகும் அனைத்து உயிரினங்களும் எளிய வடிவத்திலிருந்து சிக்கலான வடிவமாக மாறுகிறது. அதாவது, அவை ஒரு செல்லாக, பல செல்களாக, திசுக்களாக, உருவாகுகிறது.
பல்வேறு உறுப்புகளும் உறுப்பு மண்டலங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து ஒரு உயிரினமாகச் செயல்படுகிறது.
ஒரு மனிதன் மிதிவண்டியை ஓட்டும் போது, அவனது தசை மண்டலமும், எலும்பு மண்டலமும் ஒன்றிணைந்து இயங்கும். அவ்வாறு இயங்கும் போது நம்மால் கைகளால் வண்டியைப் பிடித்து இயக்கவும், கால்களால் அழுத்தவும் முடிகின்றன.
மனிதனின் கைகளையும் கால்களையும் பணிகள் செய்ய வைப்பது நரம்பு மண்டலம் ஆகும். அதேபோல், தசைகளுக்கு ஆற்றலைக் கொடுக்க சுவாச மண்டலம், செரிமான மண்டலம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலம் ஆகியவை ஒன்றாக இணைந்து செயலாற்றுகிறது.
ஒரு உயிரினத்தின் உடலினை ஓர் மாறா நிலையில் அல்லது சமச்சீர் நிலையில் (ஹோமியோஸ்டேடிக்) பராமரிக்க உறுப்பு மண்டலங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படுகிறது.
முதன் முதலில் உறுப்புகளும் மற்றும் உறுப்பு மண்டலங்களும் தட்டைப்புழுக்கள் தொகுதியில் உருவாகி பாலூட்டிகள் வகுப்பு வரைத் தொடர்கின்றன. ஒரே மாதிரி அமைப்பு உள்ள செல்கள் ஒன்றாக இணைந்து தசைத்திசு, நரம்புத்திசு போன்ற திசுக்களை உருவாகிறது.
இதயம், மூளை போன்ற உறுப்புகள் திசுக்கள் பல ஒன்றிணைந்து உருவாகின்றன. அதேபோல் ஒத்த செயல்களைச் செய்யும் உறுப்புகள் சேர்ந்து செரிமான மண்டலம், இரத்த ஒட்ட மண்டலம், நரம்பு மண்டலம் போன்ற உறுப்பு மண்டலங்களை உருவாக்கி, நரம்புத் தூண்டுணர்வைக் கடத்துதல், செரிமானம் மற்றும் இரத்த ஓட்டம் போன்ற செயல்களைச் செய்கிறது. பல்வேறு உறுப்பு மண்டலங்களில் பணிப்பங்கீடு முறை காணப்படுகிறது.
Important!
இப்பாடத்தில் ஒரு மனிதனின் செரிமான மண்டலம், கழிவு நீக்க மண்டலம் மற்றும் இனப்பெருக்க மண்டலம் போன்ற மண்டலங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் பணிகள் குறித்துப் பார்ப்போம்.
மனிதனின் உள் உறுப்புகள்