PDF chapter test TRY NOW

இரைப்பை ‘J’ வடிவ அமைப்புடையது. இது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே  உள்ள தசையாலான அகலமான உறுப்பு ஆகும்.
YCIND_221123_4748_stomach.png
இரைப்பை
 
இரைப்பையின் பணிகள்:
 
1. இரைப்பை நீர்: இவை இரைப்பையின் உள்ளடுக்குகளில் காணப்படும் சுவரிலுள்ள சுரப்பிகளிலிருந்து சுரக்கிறது. இதற்கு நிறமில்லை, மேலும் இந்நீரில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (அதிக அமிலத்தன்மை), நொதிகளான ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) மற்றும் பெப்சின் ஆகியவற்றை கொண்டுள்ளது.
 
2. பெப்சினோஜென் மற்றும் பெப்சின்: செயலற்ற பெப்சினோஜென், செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றப்பட்டு விழுங்கப்பட்ட உணவிலுள்ள புரதத்தில் செயலாற்றுகிறது.
 
3. ஹைட்ரோகுளோரிக் அமிலம்: இரைப்பை நீரில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் இரைப்பையின் உட்சுவரைப் பாதிக்கப்படாத விதம் வழுவழுப்பான திரவம் ஒன்றை சுரக்கிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலமானது உணவோடு உட்கொள்ளப்பட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.
 
4. இரைப்பைப்பாகு: இரைப்பையில், உட்கொள்ளப்பட்ட உணவு மற்றும் இரைப்பை நீரும் இணைந்து, உணவுக்கவளமானது செரிமான நிலையில் மாறியிருக்கும், இதுவே இரைப்பைப்பாகு என்று அழைக்கப்படும். இந்த இரைப்பைப்பாகு குடலுக்குள் மெதுவாக நகர்ந்து குடல்வாய் (பைலோரஸ்) வழியாகச் செல்கிறது.
 
இரைப்பையின் நொதிகள்:
 
ரென்னின் (Rennin): 
 
இரைப்பை நீரில் உள்ள இந்த நொதி உணவு செரிமானத்தைத் தூண்டும் மேலும் பாலில் உள்ள புரதமான கேசினை உறைய வைக்கும் மற்றும் புரதம் செரிமானமாவதை அதிகரிக்கிறது.
 
ரெனின் (Renin):
 
இரைப்பையில் காணப்படும் இந்த நொதி ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றும். மேலும், இது நீர் மற்றும் சோடியம் இரண்டையும் சிறுநீரக வடிநீர்மத்திலிருந்து சீராக உறிஞ்சச் செய்கிறது.
Important!
வில்லியம் பியூமாண்ட் “இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என அழைக்கப்பட்டார். அமெரிக்க இராணுவ படையில் அறுவைச் சிகிச்சை மருத்துவராக பணியாற்றினவர். இவர், இரைப்பையில் செரிமானத்தின் முக்கிய பங்காற்றுவது ஹைட்ரோகுளோரிக் அமிலம் எனத் தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் கண்டறிந்தார்.
1024px-Portrait_of_William_Beaumont._Wellcome_L0011054.jpg
வில்லியம் பியூமாண்ட்
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Portrait_of_William_Beaumont._Wellcome_L0011054.jpg