PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதொண்டை:
தொண்டை என்பது தலையினையும் உடலினையும் இணைக்கும், கழுத்தின் முன்புறம், மூக்கு மற்றும் வாய்க்குப் பின்னால் உள்ள பகுதியாகும்.
அமைப்பு: இது மென் படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்புடையது.
பணி:
- வாயிலிருந்து உணவினை விழுங்க உதவுகிறது.
- வாய்ப் பகுதியை உணவுக் குழலுடன் சேர்க்கிறது.
- உணவுக் குழல் மற்றும் மூச்சுக்குழாய் இவ்வழி செல்கிறது.
தொண்டை
உணவுக் குழல்:
மனிதனின் உணவுக் குழல் என்பது வாயிலிருந்து தொடங்கி இரைப்பை வரை குழாய் போன்ற அமைப்புடையது. இது \(22\) செ.மீ நீளம் கொண்ட தசைப்படலக்
குழலாகும்.
பணி:
பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசையின் சீராகச் சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற நிகழ்வு) போன்ற செயல்கள் நடைபெறுவதன் மூலம் உணவானது தொண்டையிலிருந்து இரைப்பைக்குக் கடந்து செல்கிறது.
உணவுக் குழல்