PDF chapter test TRY NOW
பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகள்:
- அண்டகங்கள் (முதன்மை பாலின உறுப்பு)
- கருப்பைக்குழாய்
- கருப்பை
- யோனிக்குழாய்
பெண் இனப்பெருக்க மண்டலம்
அண்டகங்கள்:
பெண்களின் அடிவயிற்றில் சிறுநீரகங்களுக்கு அருகில் ஒரே மாதிரி பாதாம் வடிவில் இரண்டு அண்டகங்கள் காணப்படும்.
பணிகள்:
பெண் இனப்பெருக்க சுரப்பிகளாக அண்டகங்கள் செயல்படுகிறது. இதிலிருந்து பெண் பாலின உயிரணுவான கரு முட்டை அல்லது அண்டம் மற்றும் பெண் பாலின ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு வளர்ச்சியடைந்த முதிர்ந்த அண்டத்தில் அதிகமான அண்டங்கள் அல்லது கரு முட்டைகள் உருவாகுகிறது.
ஃபெலோப்பியன் குழல் (கருக்குழல்):
ஃபெலோப்பியன் குழல் என்பது பெண்ணின் அண்டங்களையும் கருப்பையையும் இணைக்கும் மெல்லிய குழல் போன்ற அமைப்புடையது.
பணிகள்:
ஃபெலோப்பியன் குழலைக் கண்டறிந்தவர் பதினாறாம் நூற்றாண்டின் வாழ்ந்த இத்தாலிய உடற்கூற்றியல் அறிஞரான காபிரியேல் பாலோப்பியோ என்பவர் ஆவார்.
ஃபெலோப்பியன் குழல் கருப்பையின் இரண்டு பகுதியிலிருந்து வரும் குழல்களாகும். கருக்குழலின் முனைப் பகுதி புனல் போன்ற அமைப்பில் காணப்படும். மேலும், இதில் ஃபிம்பிரியே என்ற விரல் போன்ற நீட்சிகளும் அண்டகத்தின் அருகே அமைந்துள்ளது. இது அண்டத்திலிருந்து வரும் கருமுட்டையை கருக்குழலுக்கு எடுத்துச் செல்கிறது.
கர்ப்பப்பை:
பெண்களுக்குக் கருப்பை என்பது ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். அவர்கள் இனப்பெருக்க உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கர்ப்பப்பையானது பேரிக்காய் போன்ற அமைப்புடைய கடினமான தசை கொண்ட வெற்றிடமுள்ள ஓர் அமைப்பு ஆகும்.
பணிகள்:
இது ஒரு பெண்ணின் இடுப்பு பகுதியில் சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையே அமைந்து காணப்படுகிறது. இது கருவுற்ற கருமுட்டையை வளர்ப்பதற்கு உதவுகிறது. மேலும், இந்த உறுப்பு தசைச் சுருக்கம் செய்யும் தன்மை வாய்ந்தது. அதன் மூலம் தான் இது குழந்தையை வெளியேற்றுகிறது.
கர்ப்பப்பையின் குறுகலான அடிப்பகுதி கருப்பைவாய் (செர்விக்ஸ்) என அழைக்கப்படுகிறது. இது யோனி என்ற பகுதிக்குள் செல்கிறது. வயிற்றில் உள்ள குழந்தைக்கு உணவளிக்கக் கர்ப்பப்பை நஞ்சுக்கொடியை உருவாக்குகிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான உறுப்பு ஆகும்.
யோனிக்குழாய்:
கர்ப்பப்பையை யோனி என்றும் அழைக்கப்படும். இது சுருங்கும் தன்மை கொண்ட வெற்று தசையாலான குழாய் போன்ற அமைப்புடையது.
பணிகள்:
கருப்பைவாய் மற்றும் வெளி பிறப்புறுப்பை (external genitalia) யோனிக்குழாய் சேர்க்கிறது. இப்பகுதியில் தான் விந்துகள்ப் பெறப்படுகின்றன. யோனிக்குழாய் வழியாகத் தான் குழந்தை வெளியே (பிறப்புக் கால்வாய்) அனுப்பப்படுகிறது மற்றும் மாதவிடாய் ஓட்டமும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.
Important!
ஒரு பெண் தன் முழு இனப்பெருக்க வாழ்க்கையில், அவளது கருப்பை மொத்தம் \(500\) முறை கர்ப்பமாகும் வாய்ப்பை கொடுக்கிறது ஏனெனில் இது \(500\) மாதவிடாய் காலங்களைக் கடக்கிறது. பெண்களின் உடலில் கருமுட்டை தான் மிகப்பெரிய செல் ஆகும். கருமுட்டை உருவாதல் நிகழ்வு கருமுட்டை உருவாக்கம் (Oogenesis) என்று பெயர்.