PDF chapter test TRY NOW
நாம் உட்கொள்ளும் உணவுப் பொருள்கள் கழிவுகளாக மாறின பின்பு , அவை சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன.
மனித உடலிலுள்ள செல்களில் வளர்சிதை மாற்றம் தொடர்ந்து நடைபெறும். உயிர்வேதியியல் வினையினால் உண்டான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்களுடன் நைட்ரஜன் கலந்த பொருட்களும் காணப்படுகிறது.
இவை அனைத்தும் நமது உடலினால் பயன்படுத்தப்படுத்தப் படாமல் கழிவுப் பொருட்களாக வெளியேற்றப்படுகிறது. எனவே இவை அனைத்தும் கழிவுநீக்கப் பொருட்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
மனித உடலில் உருவாகும் முக்கிய கழிவுப்பொருள் யூரியா ஆகும், அதனுடன் வேறு சில நச்சுக்களும் உருவாகின்றன. உடலிலிருந்து இந்தக் கழிவுப்பொருட்களை அகற்றப் பயன்படும் திசுக்கள் மற்றும் உறுப்பு அமைப்பு அனைத்தும் சேர்ந்தது மனித கழிவு நீக்க மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
கழிவு நீக்க உறுப்பு:
மனித கழிவுநீக்க மண்டலத்தின் முக்கியமான உறுப்பு ஓரே மாதிரி இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் ஆகும். இது இரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களைப் பிரித்து சிறுநீரை உருவாக்குகிறது. மேலும் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரானது சிறுநீரக நாளத்தின் வழியாகச் சிறுநீர்ப் பையில்
சேகரிக்கப்படுகிறது. பின் சிறுநீர்ப்பை சுருங்குவதால் சிறுநீர்ப்புறவழி மூலம் சிறுநீரானது வெளியேற்றப்படுகிறது.
கழிவுப்பொருட்களின் விளைவு:
நம் உடலின் உள்ளே உருவாகும் கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாவிட்டால், அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை மற்றும் நச்சுப்பொருட்களாக மாறி உடல்நிலையைப் பாதிக்கவோ அல்லது மிக அதிகளவில் கழிவுகள் தேங்கினால் இறப்பை ஏற்படுத்தவோ செய்கின்றன.
Important!
நமது உடலினை சமச்சீர் நிலையில் (ஹோமியோஸ்டேஸிஸ்) வைத்து இருக்க கழிவுநீக்கமானது மிகவும் அவசியமான ஓர் செயலாகும்.
பிற கழிவுநீக்க உறுப்புகள்:
சிறுநீரகங்கள் மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள வேறு சில உறுப்புகளும் கழிவுப் பொருட்களை நீக்கச் செயல்படுகிறது. அவைகள் பின்வருமாறு;
- தோலிருந்து வெளிப்படும் வியர்வையின் மூலம் சிறிதளவு நீர், யூரியா மற்றும் உப்புக்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.
- சுவாசிப்பதன் மூலம் நுரையீரலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் படுகின்றன அதோடு கூட மூச்சு வெளிவிடுதல் காரணமாக நீர்த்திவளைகளும் சேர்ந்து வெளியேறுகிறது.
தோல்
தோல் உடலைப் பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. இது உடல் முழுவதும் போர்த்த பட்டிருக்கும் ஓர் வெளிப்புற உறை ஆகும். உடலில் காணப்படும் உறுப்புகளில் இவை மிகப் பெரியது, அதோடு மிக விரைவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.
தோலின் அமைப்பு:
தோலானது இரு அடுக்குகளைக் கொண்டது. இது நீட்சியடைந்த ஓர் அடுக்குப் போல காணப்படும்.
- மேற்புறத்தோல் - உடலில் நீர் புகாதவாறு தடுத்தல், நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் உடலிலிருந்து நீர் ஆவியாதலைத் தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றது.
- அடித்தோல் - உடலுறுப்புகளுடன் இணைக்கும் இணையுறுப்பாக செயல்படுகிறது.
Important!
ஒரு வயதான மனிதனின் தோல் அவன் உடல் எடையில் 15 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
தோலின் பணிகள்:
- பாதுகாப்பு - நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. இது பல்வேறுபட்ட அமைப்புகள் மற்றும் வியர்வை சுரப்பிகளை உருவாக்குகிறது.
- உணர்வு - தோல் ஒரு உணர்வு உறுப்பாகச் செயல்படுகிறது. அவை வெப்பம், குளிர், தொடு உணர்வு, அழுத்தம், அதிர்வு, காயம், வலிகள் முதலியவற்றை அறிய உதவுகிறது.
- கழிவு நீக்கம் - உடலில் உருவாகும் வளர்சிதை மாற்றக் கழிவுகளைத் தோலானது வியர்த்தல் மூலம் வெளியேற்றுகிறது.
- வெப்ப ஒருங்கமைவு - தோலானது வெப்பம் அதிகரிக்கும் போது வியர்வைச் சுரப்பிகள் மூலம் வியர்வையைச் சுரக்கிறது. இதனால் உடல் வெப்பநிலை \(37˚C\) யில் சீராக இயங்க உதவுகிறது. மேலும் வியர்வையில் நீருடன் சிறிய அளவு சில வேதிப்பொருட்களான அம்மோனியா, யூரியா, லாக்டிக் அமிலம் மற்றும் உப்புகள் (பெரும்பாலும் சோடியம் குளோரைடு) உள்ளது. இது தோலில் உள்ள துளைகளின் வழியாக வெளியே வந்து ஆவியாகிறது.
- வைட்டமின் D உற்பத்தி - தோல் உடலுக்குத் தேவையான வைட்டமின் D யை சூரிய ஒளியிலிருந்து தயாரித்துக் கொள்கிறது.
தோல்