PDF chapter test TRY NOW

தன்னிலை நீடித்திருந்தல்:
 
பூமியில் தோன்றும் அனைத்து உயிர்களும் முன்பு தோன்றிய உயிர்களிலிருந்தே  உருவாக்கப் படுகின்றன. இனப்பெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படை சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இதன் மூலம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஒரு தனிப்பட்ட இனம் தன்னை நிலைநிறுத்திப் பாதுகாத்துக் கொள்வதே இனப்பெருக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இது ‘தன்னிலை நீடித்திருந்தல்’ (self-perpetuation) என அழைக்கப்படுகின்றது.
 
YCIND_221124_4752_female reproductive system.png
ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பு மண்டலம்
  
முதன்மை மற்றும் இரண்டாம் பாலின உறுப்புகள்:
 
மனிதர்களில் ஆண், பெண் என இரண்டு வேறுபட்ட தனித்துவமான பாலினங்கள் உள்ளன.
  • ஆண்களிடம் காணப்படும் உடல் வளர்ச்சி, வெளிப்புற பிறப்புறுப்புகள் மற்றும் இரண்டாம் நிலைப் பால் பண்புகள் ஆகியவை பெண்களின் உடலமைப்பை விட வேறுபட்டு இருக்கிறது.
  • இனப்பெருக்க அமைப்பானது முதன்மை மற்றும் இரண்டாம் பாலின உறுப்பு என இரண்டு முக்கிய அமைப்புகளைக்  கொண்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் இனப்பெருக்க உறுப்புகள் வேறுபட்டுக் காணப்படுகிறது.
  • முதன்மைப் பாலின உறுப்புக்களான பாலினச் சுரப்பிகள் (Gonads) பாலின உயிரணு (Gametes) மற்றும் பாலின ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
  • இரண்டாம் பாலின உறுப்புகள் பாலின உயிரணு மற்றும் பாலின ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் இவற்றில் பிறப்புறுப்புக்கள் மற்றும் சுரப்பிகள் ஆகியவை காணப்படுகிறது. இவை பாலின உயிரணுவினைக் கடத்த உதவுவதோடு இனப்பெருக்க பணியினையும்  மேற்கொள்கின்றன.
ஆண் மற்றும் பெண் பருவமடையும் வயது:
மனிதன் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர் தான் பாலியல் இனப்பெருக்க உறுப்புகள் செயல்பட ஆரம்பிக்கிறது.
  • ஆண்களின் பாலியல் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி அடையும் வயது \(13\) முதல் \(14\) ஆகும்.
  • பெண்களில் பாலியல் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி அடையும் வயது \(11\) முதல் \(13\) ஆகும். இதுவே பருவமடையும் வயது (Puberty) எனப்படும்.
  • பாலியல் உறுப்பு வளர்ச்சி அடைந்த பின் ஆண்களிலும், பெண்களிலும் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக இரண்டாம் நிலை பாலியல் பண்புகள் உருவாக்கப்படுகிறது.