PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கிளாமருலஸ்
 
(இரத்தத்தில் உள்ள தேவையான பொருள் மற்றும் தேவையற்றக் கழிவுப்பொருள் களை வடிகட்டுகிறது.)
\(\huge{\downarrow}\)
 
பௌமானின் கிண்ணம்
 
(வடிகட்டப்பட்ட திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படும். இதில் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பை கார்பனேட் மற்றும் நீர் ஆகியவை காணப்படும்.)
 
\(\huge{\downarrow}\)
 
அண்மைமுனை சுருண்ட நுண்குழல்
 
(இங்கு நீர், குளுக்கோஸ் மற்றும் குளோரைடு அயனிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மீள உறிஞ்சுதல் என்ற நிகழ்வின் மூலம் மீண்டும் உறிஞ்சுதல் நடைபெறுகிறது.)
 
\(\huge{\downarrow}\)
 
இறங்கு மற்றும் ஏறு தூம்புகள் (ஹென்லே U வளைவு)
 
(இங்கு நீரும், சோடிய அயனிகளும் உறிஞ்சப்படுகிறது.)
 
\(\huge{\downarrow}\)
 
சேய்மை முனை வளைவுக் குழாய்
 
(இங்கு குளோரைடு மற்றும் நீர் உறிஞ்சப்படுகிறது.)
 
\(\huge{\downarrow}\)
 
சேகரிக்கும் நுண்குழல்
 
(இதில் உள்ள வடித்திரவத்தில் பொட்டாசியம் மற்றும் பிற வேதிப்பொருள்கள் (பெனிசிலின் & ஆஸ்பிரின்) போன்றவை சுரக்கப்படுகிறது. இந்த வடித்திரவமே சிறுநீர் எனப்படும்.)
 
\(\huge{\downarrow}\)
 
கடைசியாக சிறுநீரானது சேகரிப்பு நாளத்தின் வழியாக பெல்விஸ் பகுதிக்குச் செல்கிறது.
 
\(\huge{\downarrow}\)
 
சிறுநீர், சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பையை அடைகிறது.
 
\(\huge{\downarrow}\)
 
சிறுநீர்ப் புறவழி (பெரிஸ்டால்சிஸ் இயக்கத்தின் மூலம் அங்கிருந்து சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.)
 
\(\huge{\downarrow}\)
 
மைக்டியூரிஷன் அல்லது சிறுநீர் வெளியேற்றம்