PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு அணுவிற்கு உள்ளே அணுக்கரு (உட்கரு ) இருக்கும். அந்த அணுக்கருவின் உள்ளே நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்களும், மற்றும் மின்னூட்டம்அற்ற நியூட்ரான்களும் இருக்கும். மேலும் அணுக்கருவைச் சுற்றி எதிர் மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்கள் சுற்றி கொண்டு இருக்கும்.
அணுவின் அமைப்பு
- ஒரு அணுவின் உள்ளே எவ்வளவு புரோட்டான்கள் உள்ளனவோ அவ்வளவு எலக்ட்ரான்களும் இருக்கும்.
- புரோட்டான்களின் எண்ணிக்கை மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமமாக இருப்பதால் தான் அனைத்து அணுக்களும் நடுநிலைத்தன்மையோடு இருக்கிறது.
நடுநிலை தன்மையுடன் கூடிய அணு
அயனிகள் இரண்டு வகைப்படும் அவைகள் முறையே
- நேர் அயனி (Cation)
- எதிர் அயனி (Anion)
நேர் அயனி:
ஓர் அணுவிலிருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால், அவ்வணு நேர் மின்னூட்டத்தைப் பெறும். அதாவது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை விட புரோட்டான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, ஒரு அணுவில் ஒரு எலக்ட்ரான் நீக்குவதாலோ அல்லது ஒரு புரோட்டானை சேர்ப்பதலோ உருவாகும் அயனி நேர் அயனி எனப்படும்.
எதிர் அயனி :
ஓர் அணுவின் உள்ளே எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால், அவ்வணு எதிர் மின்னூட்டத்தைப் பெறும். அதாவது, புரோட்டான்களின் எண்ணிக்கையை விட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, ஒரு அணுவில் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பதாலோ அல்லது ஒரு புரோட்டானை நீக்குவாதலோ உருவாகும் அயனி எதிர் அயனி எனப்படும்.
நாம் முன் வகுப்பில் படித்ததை போன்று, ஒரு அணுவின் வெளிவட்டப்பாதையில் சுற்றி வரும் எலக்ட்ரான்களை ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு இடமாற்றம் செய்ய முடியும் என்பதை ஒரு செயல்பாட்டை கொண்டு புரிந்துக் கொள்வோம்.
சீப்பும் தலைமுடியும் உராய்தல்
சீப்பினை எடுத்து உங்களுடைய உலர்ந்த தலைமுடியில் அழுத்தமாகத் தேய்க்க வேண்டும். பின்பு சீப்பினை காகிதத் துண்டுகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும். இப்போது காகிதத் துண்டுகள் சீப்பினில் ஒட்டிக் கொள்ளும்.
இது எப்படி நடைபெறுகிறது?
சீப்பினால் தலைமுடியை திடமாக தேய்க்கும் போது, தலைமுடியில் இருந்து எலக்ட்ரான்கள் வெளியேறி சீப்பின் நுனிகளை அடைகின்றது.
சீப்பில் எலக்ட்ரான்கள் ஒட்டிக் கொள்ளுதல்
ஆகவே தான், எலக்ட்ரான்களை இழந்ததால் முடி, நேர் மின்னூட்டத்தையும், எலக்ட்ரான்களைப் பெற்றதால் சீப்பு, எதிர் மின்னூட்டத்தையும் அடைகிறது.எனவே, இந்த செயலபாட்டிலிருந்து ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்னூட்டத்தை இடமாற்றம் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.