PDF chapter test TRY NOW
நிறை, நீளம் ஆகியவற்றைப் போலவே மின்னூட்டமும் அனைத்துப் பருப்பொருள்களுக்கும் உரிய ஒரு அடிப்படைப் பண்பு ஆகும்.
- மின்னூட்டம் கூலூம் என்ற அலகினால் அளவிடப்படுகிறது. கூலூமை \(C\) என்ற குறியீட்டால் குறிக்கப்படும்.
- ஓர் எலக்ட்ரானின் மின்னூட்டம் மிகச்சிறிய மதிப்புடையது ஆகும். எலக்ட்ரானின் மின்னூட்டம் \(e\) என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.
- அதன் மதிப்பு \(e\) \(=\) \(1.6\) \(\times\) \({10}^{–19}\) \(C\) ஆகும்.
எந்தவொரு மின்னூட்டமும் (\(q\)) அடிப்படை மின்னூட்டமான எலக்ட்ரானின் மின்னூட்டத்தின் (\(e\)) முழு எண் மடங்காகவே இருக்கும்.
\(q\) \(=\) \(n\) \(×\)\(e\)
அல்லது
\(n\) \(=\) \(\frac{\text{q}}{\text{e}}\)
இங்கு \(n\) என்பது ஒரு முழு எண் ஆகும்.
மின்னூட்ட அலகுகள் :
நடைமுறையில் நாம் பயன்படுத்தும் சில மின்னூட்ட அலகுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவைகள் முறையே,
- \(µ\)\(C\) - மைக்ரோகூலூம்,
- \(n\)\(C\) - நேனோகூலூம்,
- \(p\)\(C\) - பிகோகூலூம்.
Important!
\(1\) \(µ\)\(C\) \(=\) \(\text{10}^{–6}\) \(C\)
\(1\) \(n\)\(C\) \(=\) \(\text{10}^{–9}\) \(C\)
\(1\) \(p\)\(C\) \(=\) \(\text{10}^{–12}\) \(C\)
மின்னூட்டங்கள் கூட்டல் பண்பிற்கு உட்பட்டவை ஆகும். அதாவது, ஓர் அமைப்பின் மொத்த மின்னூட்டமானது அதிலுள்ள அனைத்து மின்னூட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.
Example:
ஒரு அமைப்பில், \(+5\) \(C\) மற்றும் \(–2\) \(C\) ஆகிய இரு மின்னூட்டங்கள் இருப்பதாக கருதுவோம். அவ்வமைப்பின் மொத்த மின்னூட்டத்தைக் கணக்கீடு ?
(\(+5\) \(C\)) \(+\) (\(–2\) \(C\)) \(=\) \(+3\) \(C\)
எனவே, அவ்வமைப்பின் மொத்த மின்னூட்டம் \(+3\) \(C\) ஆகும்.