PDF chapter test TRY NOW
மின்னூட்டங்களுக்கிடையே மின்விசை அதாவது கவரும் விசையோ அல்லது விலக்கு விசையோ இருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், மின் விசையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல், எவ்வாறு அவை நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது ?
பொதுவாகவே, மின்னூட்டத்தைச் சுற்றி ஒரு மின்புலம் இருக்கும் என்பது நமக்கு தெரியும். எனவே, இம்மின்புலத்தினுள் இருக்கும் ஒவ்வொரு மின்னூட்டம் மின் விசையை உணரும். எனவே, இம்மின்னூட்டங்களை நிலைநிறுத்தி ஓர் அமைப்பாக வைக்க இங்கு, ஒரு குறிப்பிட்ட வேலை செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக ‘மின்னழுத்தம்’ என்ற ஒரு அளவீடு தோன்றுகிறது.
அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குக் கொண்டு வர செய்யப்படும் வேலை "மின்னழுத்தம்" எனப்படும்.
ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.