PDF chapter test TRY NOW
இப்பகுதியில் மின்புலம் மற்றும் மின்விசைக் கோடுகளைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.
ஒரு மின்னூட்டத்தைச் சுற்றி அதன் மின்விசையை உணரக்கூடிய பகுதி மின்புலம் எனப்படும்.
- மின்புலம் பெரும்பாலும் கோடுகளாலும் மின்புலத்தின் திசை அம்புக்குறிகளாலும் குறிக்கப்படுகின்றது.
தனித்த நேர் மின்னூட்டத்தின் மின் விசைக் கோடுகள்
- ஒரு சிறு நேர் மின்னூட்டத்தின் மீது செயல்படும் விசையின் திசையே மின்புலத்தின் திசையெனக் கருதப்படுகிறது. எனவே, மின்புலத்தைக் குறிக்கும் கோடுகள் மின்விசைக் கோடுகள் எனப்படும்.
மின்விசைக் கோடுகள் என்பது ஒரு ஓரலகு நேர் மின்னூட்டம் மின்புலம் ஒன்றில் நகர முற்படும் திசையில் வரையப்படும் நேர் அல்லது வளைவுக் கோடுகள் ஆகும் .
Important!
மின்விசைக் கோடுகள் கற்பனைக் கோடுகளே ஆகும். இக்கோடுகளின் நெருக்கம் அதிகமாக இருக்குமானால் அவை, மின்புலத்தின் வலிமையைக் குறிக்கும்.
இரண்டு நேர்மறை மின்னூட்டங்களுக்கு இடையே உள்ள மின்விசைக் கோடுகள்
தனித்த நேர் மின்னூட்டத்தின் மின் விசைக் கோடுகள் ஆரத்தின் வழியில் வெளிநோக்கி இருக்கும்.
- நேர் மின்னூட்டம் ஒன்று மின்புலத்தின் திசையிலேயே விசையைப் பெற்று இருக்கும்.
- எதிர் மின்னூட்டம் ஒன்று மின் புலத்தின் திசைக்கு எதிராக விசையைப் பெற்று இருக்கும்.