PDF chapter test TRY NOW
ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாயும் போது, பலவித விளைவுகளை அது ஏற்படுத்துகிறது. அவைகள் முறையே,
- வெப்ப விளைவு,
- வேதி விளைவு,
- காந்த விளைவு.
Important!
கவனம் (எச்சரிக்கை):
வெப்ப விளைவு, வேதி விளைவு ஆய்வுகளை \(9\) \(V\) மின்னியக்கு விசை கொண்ட மின்கலங்களைக் கொண்டுதான் செய்ய வேண்டும். ஏனெனில் \(9\) \(V\) மின்கலம் மின் அதிர்ச்சியைத் தராது. மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளில் கொடுக்கப்படும் \(220\) \(V\) மாறுமின்னோட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், பெரும் மின் அதிர்ச்சி ஏற்பட்டு உடல் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும்.
மாதிரி விளக்கப் படம்
- அலுமினிய மென்தகடு ஒன்றினை அம்புக்குறி வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் முனை கூராக இருக்க வேண்டும்.
- அம்புக் குறியின் பின்பக்கத்தில் காகிதம் ஏதேனும் இருப்பின், அதை அகற்ற வேண்டும். பின்பு மென் தகட்டை மரப்பலகையின் மீது வைக்க வேண்டும்.
- இரு மெல்லிய ஊசிகளுடன் கம்பிகளை இணைத்து அவற்றை ஒரு மின்கலத்துடன் \(9 V\) இணைக்க வேண்டும்.
- ஒரு ஊசியை மென்தகட்டின் கூர்முனையில் வைத்து அழுத்த வேண்டும், மற்றோன்றை \(1\) அல்லது \(2\) மிமீ தள்ளி வைத்து அழுத்த வேண்டும்.
அலுமினிய மென் தகட்டின் கூர்முனை உருகுகிறதா?
- மின்னோட்டத்தின் பாய்வு "எதிர்க்கப்படும் போது", அங்கு வெப்பம் உருவாகும்.
- ஒரு கம்பியிலோ அல்லது மின்தடையத்திலோ எலக்ட்ரான்கள் இயங்கும் போது அவை தடையை எதிர் கொள்ளும். இதைக் கடக்க வேலை செய்யப்பட வேண்டும். இதுவே வெப்பஆற்றலாக மாற்றப்படுகிறது.
- மின்னாற்றல் வெப்பஆற்றலாக மாற்றப்படும் இந்நிகழ்வு ஜூல் வெப்பமேறல் அல்லது ஜூல் வெப்பவிளைவு எனப்படும்.
- இவ்விளைவை முதன் முதலில் ஜூல் என்ற அறிவியலறிஞர் விரிவாக ஆய்வு செய்தார்.
வெப்ப விளைவை அடிப்படையாக கொண்டே மின்வெப்ப சாதனங்கள் உருவாக்கப்படுகிறது மின் வெப்ப சாதனங்களில் ஒரு சிலவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Example:
மின்சலவைப் பெட்டி:
நீர் சூடேற்றி:
- மின் இணைப்புக் கம்பிகளில் கூட சிறிதளவு மின்தடை காணப்படுவதால் தான், எந்தவொரு மின் சாதனமும் இணைப்புக் கம்பியும் பயன்படுத்திய பின் சூடாகக் காணப்படுகின்றன.