PDF chapter test TRY NOW
ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாயும் போது ஏற்ப்படும் வேதி விளைவை இப்பகுதியில் பார்ப்போம்.
வேதி கரைசலுடன் கூடிய மின் சுற்று
- ஒரு பாதியளவு தாமிர சல்பேட்டு கரைசலால் நிரப்பப்பட்ட குடுவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- உலர் மின் கலத்தில் பயன்படுத்தப்படும் கார்பன் தண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் ஒரு முனையில் இணைப்புக் கம்பியைச் சுற்ற வேண்டும்.
- தடிமனான தாமிரக்கம்பி ஒன்றை எடுத்து சுத்தம் செய்து பின்னர் சுத்தியலால் நன்கு அடித்து அதைத் தகடுப் போன்று மாற்றிக் கொள்ள வேண்டும்.
- தாமிரக்கம்பி மற்றும் கார்பன் தண்டு இரண்டையுமே தாமிர சல்பேட்டுக் கரைசலில் படத்தில் உள்ளது போன்று வைக்க வேண்டும்.
- கார்பன் தண்டை மின்கலத்தின் எதிர் மின்வாயுடனும் தாமிரக்கம்பியை நேர் மின்வாயுடனும் இணைக்க வேண்டும்.
- கார்பன் தண்டும் தாமிரக்கம்பியும் அருகில் உள்ளவாறும் அதே சமயம் ஒன்றையொன்று தொடாத வண்ணமும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சிறிது நேரத்திற்குப் பிறகு கார்பன் தண்டின் மீது தாமிரப் படிவத்தைக் காணலாம். இதுவே மின்னாற்பூச்சு அல்லது மின் முலாம் பூசுதல் எனப்படும். இது மின்னோட்டத்தின் வேதி விளைவினால் ஏற்படும் நிகழ்வாகும்.
வேதி விளைவு
- இதுவரை நாம் பார்த்த நிகழ்வுகளில் மின்னோட்டம் எலக்ட்ரான்களினால் மட்டுமே கடத்தப்படு வதைக் கண்டோம். ஆனால், தாமிர சல்பேட்டுக் கரைசலில் மின்னோட்டம் பாயும்போது எலக்ட்ரான் மற்றும் தாமிர நேர் அயனி இரண்டுமே மின்னோட்டத்தைக் கடத்துகின்றன.
- கரைசல்களில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு ‘மின்னாற்பகுப்பு’ எனப்படும். மின்னோட்டம் பாயும் கரைசல் ‘மின்பகு திரவம்’ எனப்படும்.
- கரைசலில் உள்ள நேர் மின்வாய் 'ஆனோடு' (Anode) எனவும் எதிர் மின்வாய் 'கேதோடு' (cathode) எனவும் அழைக்கப்படுகின்றன.
- இங்கு குறிப்பிடப்பட்ட ஆய்வில் தாமிரக்கம்பி ஆனோடாகவும் கார்பன் தண்டு கேதோடாகவும் செயல்படுகின்றன.
Important!
மனித உடலில் மின்னூட்டத் துகள்களின் இயக்கத்தால் மிகவும் வலிமை குன்றிய மின்னோட்டம் உருவாகிறது. இதை நரம்பு இணைப்பு சைகை என்பர்.
சைகைகள்
இத்தகைய சைகைகள் மின் வேதிச்செயல்களால் உருவாகின்றன. மூளையிலிருந்து பிற உறுப்புகளுக்கு நரம்பியல் மண்டலம் மூலமாக இவை பயணிக்கின்றன.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/0/01/Neurotransmitters.jpg