PDF chapter test TRY NOW
மின் கடத்துப் பொருள்கள் மற்றும் மின் காப்பான்கள் பற்றி இப்பகுதியில் காண்போம்.
மின் கடத்திகள்:
மின்சுற்றில், மின் கருவிகளை இணைக்க இணைப்பு கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றது. இந்த கம்பிகள் பொதுவாக உலோகங்களால் ஆனவை ஆகும். அவை மின்னோட்டத்தை எளிதில் கடத்துக்கின்றன. இவ்வாறு மின்னோட்டத்தை கடத்தும் பொருட்கள் மின்கடத்திகள் எனப்படும்.
மின்னோட்டத்தை தன் வழியாக செல்ல அதிகமாக அனுமதிக்கும் பொருட்கள் நல்ல கடத்திகள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக, அனைத்து உலோகங்களும் மின்சாரத்தினை நன்கு கடத்தும் திறன் கொண்டவை ஆகும்.

தாமிரம்

அலுமினியம்
மின்னோட்டத்தை தன் வழியாக செல்ல குறைவாக அனுமதிக்கும் பொருட்கள் குறை கடத்திகள் என்று அழைக்கப்படுகின்றன.
Example:
நிக்ரோம், வெள்ளீய ஆக்சைடு உள்ளிட்ட பொருள்கள் மின்னோட்டத்திற்கு அதிக மின்தடையை அளிக்கின்றன. அவை குறை கடத்திகள் அல்லது மின் கடத்தாப் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.
மின்னோட்டத்தை தன் வழியாக செல்ல சிறிதும் அனுமதிக்காத பொருட்கள் மின் காப்பான்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Example:
- கண்ணாடி

- பல்படிமம் (பாலிமர் ), இரப்பர் மற்றும் காகிதம்

இவ்வனைத்து வகைப் பொருள்களுமே பல்வேறு வகைகளில் பயனுள்ளதாகவும் மின்சுற்றுகளில் பாதுகாப்புக் கருவிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.