PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் நாம் மின்சுற்றில் மின் கருவிகள் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.
நாம் மின்கலத்தின் ஒரு முனையுடன் இன்னொரு முனையை மட்டும் கம்பி கொண்டு இணைப்பது இல்லை. பொதுவாக, ஒரு மின் விளக்கையோ, சிறு மின் விசிறியையோ அல்லது ஏதேனும் ஒரு மின் கருவியையோ இணைத்த பின் அதன் வழியே மின்னோட்டத்தை செலுத்துகிறோம். இதனால், மின்கலம் அல்லது மின்னாற்றல் மூலத்திலுள்ள குறிப்பிட்ட அளவு மின்னாற்றல் ஒளியாற்றலாகவோ, எந்திர ஆற்றலாகவோ, அல்லது வெப்ப ஆற்றலாகவோ மாற்றப்படுகிறது.
எளிய மின்சுற்று
- மின் விளக்கு அல்லது மின் கருவிகள் வழியாகச் செல்லும் ஒவ்வொரு கூலூம் மின்னூட்டமும் மற்றும் பிற வகைகளாக மாற்றப்படும் மின்னாற்றலின் அளவும் அந்த மின் கருவிக்குக் குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாட்டைச் சார்ந்தே இருக்கிறது. மின்னழுத்த வேறுபாட்டின் குறியீடு \(V\) ஆகும்.
எனவே,
\(V\) \(=\)\(\frac{\text{W}}{\text{q}}\)
இங்கு,
- \(W\) என்பது செய்யப்பட்ட வேலை, அதாவது பிற வகை ஆற்றல்களாக மாற்றப்பட்ட மின்னாற்றலின் அளவு (ஜூலில்) ஆகும்.
- \(q\) என்பது மின்னூட்டத்தின் அளவு (கூலூமில்).
- மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னியக்கு விசை இவை இரண்டிற்குமே \(SI\) அலகு வோல்ட் (\(V\)) ஆகும்.
வோல்ட்மீட்டர்
மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி வோல்ட்மீட்டர் ஆகும்.
பக்க இணைப்பில் வோல்ட்மீட்டர்
ஒரு மின் சுற்றின் காணப்படும் மின்னழுத்த வேறுபாட்டை அளந்திட வோல்ட்மீட்டர் ஒன்றை சுற்றில் பக்க இணைப்பாக இணைக்க வேண்டும்.
மின்சுற்றில் வோல்ட்மீட்டர்
- மின்விளக்கு ஒன்றின் மின்னழுத்த வேறுபாட்டை அளந்திட வேண்டுமெனில், மேலே காட்டியுள்ளவாறு அதை இணைக்க வேண்டும்.
- வோல்ட்மீட்டரின் சிவப்பு நேர்முனை மின்சுற்றின் நேர்க்குறி (\(+\)) பக்கத்துடனும் அதன் கருப்பு எதிர்முனை மின்சுற்றின் எதிர்க்குறி (\(–\)) பக்கத்துடனும் மின்சாதனத்திற்குக் (மின்விளக்கு) குறுக்கே இணைக்கப்பட வேண்டும்.