PDF chapter test TRY NOW

இப்பகுதியில் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்னோட்டங்களைப் பற்றிக் கற்றுக்கொள்ள போகிறோம்.
இரண்டு வித மின்னோட்டங்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். அவைகள் முறையே,
  • நேர்திசை மின்னோட்டம் (DC),
  • மாறுதிசை மின்னோட்டம் (AC). 
நேர்திசை மின்னோட்டம்:
  • மின்சுற்றுகளில் எப்பொழுது மின்னோட்டமானது அதிக மின்னழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தத்திற்கு, நேர் மின்னூட்டங்கள் இயங்கும் திசையில் இருக்கும் என்பதை நாம் அறிவோம்.
  • எலக்ட்ரான்கள் மின்கலத்தின் எதிர் மின்வாயிலிருந்து நேர் மின்வாய் நோக்கி நகர்கின்றது.
  • இரு முனைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாட்டை நிலைநிறுத்த நாம் மின்கல அடுக்கைப் பயன்படுத்துகிறோம்.
  • நேர்திசை மின்னோட்டத்தின் மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஒன்றும் ஆகும்.
cellholder.png
மின்கல அடுக்கு
 
YCIND20220825_4331_Electric charge and current_11.png
நேர் திசை மின்னோட்டம்
ஒரே திசையில் மின்னூட்டங்கள் இயங்குவதால் ஏற்படுவதே நேர்திசை மின்னோட்டம் ஆகும்.
நேர்திசை மின்னோட்டத்தின் பிற மூலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவைகள் முறையே,
Example:
சூரிய மின்கலங்கள், வெப்ப மின்னிரட்டைகள்
 
YCIND_221003_4516_photo_1.png
  • பல மின்னணுச் சுற்றுகள் நேர்திசை மின்னோட்டத்தைப் பயன்படுத்துகின்றன.
  • நேர்திசை மின்னோட்டத்தைப் பயன்படுத்தி வேலை செய்யும் கருவிகள் சிலவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவைகள் முறையே,
Example:
கைபேசி, வானொலிப்பெட்டி, மின் விசைப்பலகை, மின்சார வாகனங்கள்
 
YCIND_221003_4516_photo.png