PDF chapter test TRY NOW
இப்பகுதியில் மாறுதிசை மின்னோட்டத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள போகிறோம். ஒரு மின் தடையத்திலோ அல்லது மின் பொருளிலோ மின்னோட்டத்தின் திசை மாறி மாறி இயங்கினால் அது மாறுதிசை மின்னோட்டம் எனப்படும்.
மாறுதிசை மின்னோட்டம்
- மாறுதிசை மின்னோட்டம் காலத்தைப் பொறுத்து சைன் வடிவ முறையில் மாறும் இயல்புடையது ஆகும் . மேலும் இந்த மாறுபாட்டை அதிர் வெண் என்ற பண்பைக் கொண்டு விவரிக்கலாம்.
ஒரு வினாடியில் மாறு மின்னோட்டத்தில் ஏற்படும் முழு சுழற்சிகளையே அதிர் வெண் என்பர்.
- மாறு மின்னோட்டத்தில் எலக்ட்ரான்கள் ஒரே திசையில் இயங்குவது கிடையாது. ஏனெனில், மின் முனைகள் அதிக மற்றும் குறைந்த மின்னழுத்த மதிப்பினை மாறி மாறி அடைகின்றன.
- எனவே, கம்பியில் மாறுதிசை மின்னோட்டம் பாயும் போது எப்பொழுது எலக்ட்ரான்கள் முன்னும் பின்னுமாக இயங்குகின்றது.
- நம் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்னோட்டம் மாறுதிசை மின்னோட்டமே ஆகும்.
- நேர்திசை மின்னோட்டத்தில் மட்டுமே இயங்கக்கூடிய சாதனங்களை மாறுதிசை மின்னோட்டத்தில் இயக்க வேண்டும் என்றால், முதலில் அவை மாறுதிசை மின்னோட்டத்திலிருந்து நேர்திசை மின்னோட்டமாக மாற்ற ஒரு கருவி தேவைப்படும். அதற்குப் பயன்படும் கருவிக்கு திருத்தி எனப்படும்.
- வழக்கத்தில் இக்கருவியை மின்கல திருத்தி அல்லது இணக்கி (பொருத்தி) என்று அழைப்பார்கள். மாறாக, நேர்திசை மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக மாற்றப் பயன்படும் கருவி நேர்மாற்றி அல்லது புரட்டி என்றும் அழைப்பார்கள்.