PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoரூதர்ஃபோர்டால் வழங்கப்பட்ட மாதிரி தாம்சனின் மாதிரியைதாண்டிச் சென்று, ஆல்ஃபா
துகளின் நடத்தை அல்லது பண்பை விளக்கினாலும், இது சில
கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. கிரகங்கள்
சூரியனைச் சுற்றிலும் ஈர்ப்புவிசையின்
கீழ் செல்ல முடியும். ஆனால் எதிர் எதிரான மின்சுமைகள் ஒன்றையொன்று ஈர்ப்பதால்
எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்கள்
நேர்மின்சுமையுடைய உட்கருவினால்
ஈர்க்கப்பட வேண்டும். ஆனால் அது நடக்க
வில்லை.
ஆல்ஃபா துகளின் சோதனை
கவர்ச்சி விசையின் மூலம்
இயங்கும் மின் சுமையுடைய துகள் மின்காந்த கதிர்வீச்சின் வடிவில் தொடர்சிசியாக ஆற்றலை
இழக்கும் என்பதை கிளார்க் மாகஸ்வெல் நிரூபித்தார். இவ்வாறு கோள்களைப் போல்
அல்லாமல் எலக்ட்ரான்கள் மின்சுமைபெற்ற
துகள்கள் அதனால் அவை உட்கருவைச் சுற்றும்
பொழுது கதிர்வீச்சை வெளியிடுகின்றன.
இதன் காரணமாக எலக்ட்ரான்கள் ஒவ்வொரு
சுற்றிருக்கும் ஆற்றலை இழந்து உட்கருவின்
அருகே நெருங்கி வருவதால் அணுக்கருவை
சுற்றி வரும் பாதை சிறிது சிறிதாக சுருங்கி
இறுதியில் எலக்ட்ரான்கள் அணுகருவினுள் விழ வேண்டும். அதாவது, அணு அதன்
நிலைப்புத் தன்மையை முற்றிலும் இழக்க வேண்டும்.
ஆனால், இவை எதுவும் நிகழவில்லை. மேலும்
அணு நிலைப்புத் தன்மை உடையது.
ரூதர்போர்டு அணுமாதிரி
மேற்கண்ட காரணத்தால் ரூதர்போர்டு அணுமாதிரி
அணுவின் நிலைப்புத் தன்மையை விளக்க
முடியவில்லை. இவருடைய இந்த மாதிரிக்கு மேலும்
சில எதிர்ப்புகள் இருந்தன. இது மேலும் பல
ஆய்வுகள் மூலம் அணுகட்டமைப்பின் சிறந்த
மாதிரிகள் உருவாக வழிவகை செய்ததது.