PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகேக், திராட்சை மாதிரியின் படி ஆல்ஃபா துகள்களை அதன் பாதையிலிருந்து விளக்கக்கூடிய எந்த விதமான அடர்த்தியான அல்லது பளுவான எதுவும் தங்க அணுக்களுக்குள்ளே இல்லை என்று முடிவு செய்யப்பபட்டது. ஆனால் ருதர்போர்ட் கண்டறிந்த இந்த அனுமானத்துடன் அது ஒத்திருக்கவில்லை. எனவே இந்த ஆய்வின் மூலம் திரட்டிய ஆதாரங்களை விளக்க ஒரு புதிய அணு மாதிரி தேவை என்று இந்த சோதனை உணர்த்தின.
கேக், திராட்சை மாதிரி
தாம்சன் மாதிரியில் ஆல்ஃபா துகள்கள் திருப்பிவிட சாத்தியமே இல்லை. ஆனால் ஆல்ஃபா துகள் 180º கோணத்தில் விளக்கமடைந்து நேர்மின் சுமை அணு முழுவதும் பரவாமல் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அதிகரிக்கிறது. ஒரு அணுவில் நேர்மின் சுமை அனுவினுள்ளே ஒரு பகுதியில் மட்டும் செறிவு பெற்று இருந்தால் அப்போது ஆல்ஃபா துகள் 180º திருப்பி விட போதுமான வீரிய மிகுந்த மின் நிலைப்பு விலக்கம் இருந்தால் தான் இயலும்.
இதிலிருந்து இரண்டு கருத்துகள் ருதர்போர்டு மற்றும் அவரின் குழுவிடம் இருந்தது. அவை
(i). நிறைய அணுத் துகள்கள தன் பாதையில் விலக்கபடையாமல் செல்வதால் அதன் பாதையில் எந்த வித தடங்கலும் இல்லை. இதனால் அணுவின் ஒரு பகுதி வெற்றிடமாக இருப்பது தெரிகிறது.
(ii). சில ஆல்ஃபா கதிர்கள் வலது புறம் திசை மாறச் செய்வதால் நேர் மின்னோட்டத் துகள்கள் அணுவின் நடுவில் இருக்கும்.
தாம்சன் சோதனை
அவர்களது கண்டுபிடிப்புகள் மிகவும் சரியானவை என்பதை உறுதிபடுத்த, \(1908\) மற்றும் \(1913\) ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் உள்ள வாயுக்கள் உட்பட பலவிதமான பொருள்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன.
கோள வடிவ மாதிரி:
மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில்
ரூதர்ஃபோர்டு தாம்சனின் கருத்தை நிராகரித்து அனைத்து நேர்மின் சுமையும் அணுவின் மையப் பகுதியில் செறிந்துள்ளது என்றும் அப்பகுதி உட்கரு என்றும் உட்கருவை சுற்றி குறிப்பிட்ட
தூரத்தில் எலக்ட்ரான்கள் ஆர்பிட்டால்களில்
சுற்றுகின்றன என்ற கருத்தை கூறினார். அதுமட்டுமின்றி உட்கருவுக்கும் எலக்ட்ரானுக்கும்
இடையில் வெற்றிடம் உள்ளது என்ற
கருத்தையும் கூறினார். இது அணுவின் கோள வடிவ மாதிரி என்று அழைக்கப்படுகிறது.
ரூதர்போர்டின் அணு மாதிரியின் முக்கிய அம்சங்கள்:
- அணுவின் மையப்பகுதியில் மிகமிகச் சிறிய உட்கரு இடம் பெற்றுள்ளது.
- உட்கருவைச் சுற்றியுள்ள பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது.
- அணுவின் உட்கரு எனப்படும் சிறிய நேர்மின் சுமை கொண்ட பகுதியில், அணுவின் மொத்த நிறையும் பொதிந்துள்ளது.
- அணுவின் பெரும்பகுதியான வெற்றிடத்தில் அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் இடம் பெற்றுள்ளன.
- எலக்ட்ரான்கள் உட்கருவை வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.