PDF chapter test TRY NOW
\(1932\) ஆம் ஆண்டு ஜேம்ஸ் சாட்விக் என்னும்
அறிவியலார் பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா
கதிரால் தாக்கும்போது புரோட்டான்களுக்கு இணையான நிறை உள்ள துகள்கள்
வெளியேறுவதைக் கண்டுபிடித்தார்.
\(_4Be^8\) + \(α-rays\) \(\rightarrow\) \(_6C^1{^2}\) + நியூட்ரான் (n)
பெரிலியம் + ஆல்ஃபா கதிர் \(\rightarrow\) கார்பன் +
நியூட்ரான
இந்த துகள்களுக்கு மின்சுமை எதுவும்
இல்லை. இவை நியூட்ரான்கள் என்று
அழைக்கப்படுகின்றன. ஹைட்ரஜனை தவிர, ஏனைய
அணுக்களின் உட்கருவில் நியூட்ரான்கள்
இடம் பெற்றுள்ளன. ஒரு நியூட்ரானின் நிறை,
ஏறக்குறைய ஒரு புரோட்டானின் நிறைக்குச் சமம். நியூட்ரான்கள் ‘(\(n\))’ என குறிக்கப்படுகின்றன.
\(1920\) ஆம் ஆண்டு அணு உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ரூதர்போர்டு தீர்மானித்தார். ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானை கண்டறிந்தார். சாட்விக் ரூதர்போர்டின் மாணவர் ஆவார்.
உட்கருவின் அமைப்பு:
உட்கரு மாதிரி
எலக்ட்ரான்களின் நிறை, மிக மிகக் குறைவு.
எனவே அதன் நிறை புறக்கணிக்கத்தக்கது.
ஆகவே ஓர் அணுவின் மொத்த நிறை, அதன்
உட்கருவின் நிறையைச் சார்ந்து உள்ளது. ஓர்
அணுவின் உட்கரு இரண்டு கூறுகளைக்
கொண்டது. அவை புரோட்டான்களும்,
நியூட்ரான்களும் ஆகும். புரோட்டான்கள்
நேர் மின்சுமையுடையத் துகள்கள்
ஒத்த மின்சுமையைப் பெற்றிருப்பதால்,
புரோட்டான்கள் ஒன்றையொன்று விலக்கும் தன்மையையைப் பெறுகின்றன.
மிகச்சிறிய உருவளவு கொண்ட நிலையான
உட்கருவில் நியூட்ரான்கள் இன்றி ஒன்றுக்கு
மேற்பட்ட புரோட்டான்கள் பங்கு பெற முடியாது. நியூட்ரான்கள், உட்கருவில்
உள்ள நேர்மின்னேற்றம் பெற்ற புரோட்டான்
துகள்களுக்கிடையே இருக்கும் விலக்கு விசையை குறைப்பதன் மூலம், உட்கருவில்
உள்ள துகள்கள், நிலையாக உள்ளடங்கி
இருக்கக் காரணமாகிறது.
புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைக்கும் விசையானது ஈர்ப்பு விசையை காட்டிலும் மிகவும் வலிமையானது.
நியூக்ளியான்
நியூக்ளியான்கள்:
அணுவின் அடிப்படைத்துகள்களான புரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன.
அணுக்கள் ஏன் நடுநிலைத் தன்மை கொண்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அணு
ஒரே எண்ணிக்கையுள்ள புரோட்டான்கள்
மற்றும் எலக்ட்ரான்களையும் கொண்டுள்ளதால்
அணு நடுநிலைத்தன்மை பெற்றுள்ளது.
அடிப்படைத் துகள்களின் சிறப்புகள்:
ஒரு தனிம சேர்மத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைஅவற்றில் அடங்கியுள்ள
அணுவின் அடிப்படைத் துகள்களைப் பொறுத்து
விளக்க முடியும். புரோட்டான், நியூட்ரான்,
எலக்ட்ரான்கள் அணுவின் அடிப்படைத்
துகள்களாகும்.
அணுவின் அடிப்படைத் துகள்களான புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் நீங்கலாக, அணுவின் உட்கருவில் உள்ள பிற அடிப்படைத் துகள்களாவன: மெசான்கள், நியூட்ரினோக்கள், ஆன்டி நியூட்ரினோக்கள், பாசிட்ரான்கள்.