
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅணு எண் (Z):
கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் அணுவின்
அமைப்பு ஆகும்.

அணுவின் அமைப்பு
மேலே உள்ள படம் வண்ணக் குறியீடு பயன்படுத்தி
புரோட்டான்கள்மற்றும் எலக்ட்ரான்களின்
எண்ணிக்கையைக் கணக்கிட்டு கீழே உள்ள
அட்டவணையை நிறைவு செய்யாவும்.
புரோட்டான்களின் எண்ணிக்கையும்,
எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் ஒரே
மாதிரியாக உள்ளதா எனக் கண்டுபிடிக்கவும்.
துகள்கள் | நிறை | மின்சுமை அலகு | மின்சுமை கூலும் | இடம் | நிறைக்கும்
ஹைட்ரஜன்
அணுவிற்கும் உள்ள
தொடர்பு |
எலக்ட்ரான் | 9.108 x 10^2{^8} கி | -1 | -1.602 x 10^1{^9} | சுற்றுப்பாதை | 1/1837 |
புரோட்டான் | 1.672 x 10^2{^4} கி | +1 | 1.602 x 10^1{^9} | உட்கரு | 1 |
நியூட்ரான் | 1.674 x 10^2{^4} கி | 0 | - | உட்கரு | 1 |

ஒரு தனிமத்தில் உள்ள ஓர் அணு அதன்
உட்கருவில் அதற்கு உரிய புரோட்டான்கள்
எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. அது பிற
தனிமங்களில் உள்ள அணுக்களில் இருந்து
வேறுபட்டு உள்ளது. அதன் காரணமாக புரோட்டான்கள் ஒரு அணுவினுடைய விரல்
அடையாளமாகக் கணக்கிடப்படுகிறது.

கலை சொல்லியம்
ஒரு அணுவின் அணு எண் என்பது அத்தனிமத்தின் அணுவின் உட்கருவினுள் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை என்று வரையறுக்கப்படுகிறது. அணு எண் Z என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
மேலே உள்ள தனிமத்தின் அணு எண்ணை கண்டுபிடி?
தனிமத்தின் அணுவில் 6 புரோட்டான்கள்
உள்ளதால் அதன் அணு எண் = 6, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6 அது
அணு எண்ணிற்கு சமமானது.
அணு எண் என்பது அத்தனிம அணுவின் உட்கருவினுள் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அல்லது உட்கருவை வெளிப்பாகத்தில் சுற்றி வருகின்ற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என வரையறுக்கப்படுகின்றது.
நடுநிலை அணுவில்,
அணுஎண் = புரோட்டான்களின எண்ணிக்கை = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
Example:
ஓர் அணு 11 புரோட்டான்கள், 11 எலக்ட்ரான்கள் மற்றும் 12 நியூட்ரான்களையும் பெற்றுள்ளது. அதன் அணு எண்ணை கண்டுபிடி? அத்தனிமத்தின் பெயரினை எழுதவும்? அணுஎண் = புரோட்டான்களின் எண்ணிக்கை = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 11
ஃ அணு எண் = 11 தனிமத்தின் பெயர் சோடியம்.