PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வெவ்வேறு காலத்தில் ஒரு நபர் நடந்த தூரத்தினைக் காட்டும் தொலைவு - கால வரைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
YCIND16052022_3761_Motion (TN 9th Tamil).png
தொலைவு - கால வரைப்படம்
 
மேலே உள்ள தொலைவு - கால வரைப்படத்திலிருந்து அந்த நபர் நடந்து  சென்ற வேகத்தை நீங்கள் கணக்கிட்டுக் கூறமுடியுமா?
 
ஆம், உங்களால் முடியும். அது பண்பளவில் நேர்கோட்டின் சாய்வாக அமைகிறது.
 
\(\text{நடைவேகம்}\) \(=\)  கடந்த தொலைவுஎடுத்துக் கொண்ட நேரம்
 
வரைபடத்திலிருந்து,
 
\(\text{நடைவேகம்}\)  \(=\) BCAC 
 
\(\text{நேர்கோட்டின் சாய்வு}\) \(=\) 5005
 
\(\text{நேர்கோட்டின் சாய்வு}\) \(=\) \(100\) \(\frac{\text{மீ}}{\text{வி}}\)
 
சாய்வு அதிகரிக்க அதிகரிக்க (அதிக மதிப்பு) வேகமும் அதிகரிக்கும்
 
ஒரே பாதையில் செல்லும் அன்புவின் நடைப்பயணம், அழகியின் மிதிவண்டிப் பயணம் மற்றும் கனிஷ்காவின் மகிழுந்துப் பயணத்திற்கான தொலைவு – கால வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
 
YCIND16052022_3761_Motion (TN 9th Tamil)_1.png
வேகம் ஓப்பிடு  வரைப்படம்
  • நடை வேகத்தைக் காட்டிலும் மிதிவண்டியின்வேகம் அதிகமாகவும், அதைக் காட்டிலும் மகிழுந்தின் வேகம் அதிகமாகவும் இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.
  • மூன்று பயணங்களின் தொலைவு - கால வரைபடங்கள் படத்தில் காட்டியது போல இருக்கும். வேகம் அதிகரிக்க அதிகரிக்க தொலைவு–கால வரைபடத்தில் நேர்கோட்டின் சாய்வும் அதிகரிக்கிறது.